For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தை பலாத்கார சம்பவம் சமூகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்:பிரதமர் மன்மோகன்சிங்

By Mathi
Google Oneindia Tamil News

Manmohan singh
டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் குழந்தை பலாத்கார சம்பவம் சமூகத்தில் இருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், தரமான பயிற்சியினை தொடக்கத்திலேயே ஆட்சியர்களுக்குவழங்க வேண்டும். ஊழலை ஒழி்க்க அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கும், கண்காணிப்பும் முக்கியத்துவம் அளிக்கப்படும், இது முழுக்கவனத்தில் எடுத்து கொள்ளப்படும். அடிப்படை தேவையான கல்வி, சுகாதாரம் பேணிக்காத்திடும் விதமாக அதிகாரிகள் உழைத்திட வேண்டும். நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்கு நாம் உத்தரவாதம் அளித்திட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, கண்காணிப்பு விஷயம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது. மாணவி கற்பழிப்பு சிறுமி பலாத்காரம் போன்றவை நமக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

சமீபத்திய குழந்தை பலாத்காரம் சம்பவம் சமூகத்தில் இருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டும். பெண்களின் அதிகாரம் மற்றும் அவர்களின் பங்களிப்பிற்கு நாம் துணை நிற்க வேண்டும். பொதுமக்களின் தொடர்புடைய முக்கிய , கவலை தரும் விஷயத்தில் வெளிப்படையான நிலையை பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.

English summary
As protests against the brutal rape of a five-year-old in Delhi continue, Prime Minister Manmohan Singh today said "vast improvement" was needed in the security accorded to women.The gruesome assault on a little child reminds us of the need to work collectively to root out this sort of depravity," he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X