For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியாறு அணை.. தமிழக அதிகாரி, உறவினர்களை திருப்பி அனுப்பிய கேரளா!

By Chakra
Google Oneindia Tamil News

கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு உறவினர்களுடன் சென்ற தமிழக அதிகாரிகளை அணை பகுதிக்குள் அனுமதிக்காமல் கேரள காவல் துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை ஆய்வுக்கு உச்ச நீதிமன்ற ஐவர் குழு அமைக்கப்பட்டதில் இருந்தே, அணை பகுதிக்கு தமிழக பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட எவரையும் கேரள காவல் துறையினர் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.

பொறியாளர்களே கூட ஏராளமான அனுமதிகள் பெற்ற பிறகே அணை பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Kerala refuses to allow TN official, families to visit Mullai periyaru dam

இந்நிலையில் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், அவர்களதுு உறவினர்கள், நணபர்கள் என 50 மேற்பட்டோர் தேக்கடி படகு தளத்தின் வழியாக அணைக்கு சென்றனர்.

அப்போகு தேக்கடி படகு தளத்தில் இருந்த கேரள வனத்துறையினர் தமிழக அதிகாரிகளிடம் எங்கே போகிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு பெரியார் அணை சிறப்பு கோட்ட செயற் பொறியாளர் ராஜேஷ் பதிலளிக்கையில், பொதுப்பணித் துறை அதிகாரிகளின் குடும்பத்தினரான நாங்கள் அணைக்கு செல்வதற்கும், தங்குவதற்கும் அதிகாரம் உண்டு என்று கூறிவிட்டு தமிழக அரசுக்கு சொந்தமான கண்ணகி, ஜலரத்னா ஆகிய படகுகளில் ஏறிச் சென்றனர்.

ஆனால், திடீரென கேரள சுற்றுலா துறையினரும் காவல் துறையினரும் படகுகளை பாதி வழியில் நிறுத்தினர்.

30 பேர் செல்லக்கூடிய அதிகம் பேர் செல்வதை அனுமதிக்க முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படகுகளை திருப்பிக் கொண்டு வந்து அதில் இருந்த அனைவரையும் மீண்டும் படகுத் தளத்தில் இறக்கி விட்டுவிட்டனர்.

கேரளா இந்தியாவுக்குள்ள தானே இருக்கு?!!

English summary
Kerala government officials refused to allow Tamil Nadu official and families to visit Mullai periyaru dam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X