For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் தீவிரவாத தாக்குதல்... குண்டு வெடித்து 21 பேர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெய்ஜீங்: சீனாவில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 21 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் ஜின்ஜிகாங் மாநிலம் பாசு கவுன்டி அருகே கஷ்கார் நகரில் தீவிரவாதிகள் செவ்வாய்கிழமை வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

சீனாவில் புதிய அதிபராக ஜி ஜிங்பிங் பதவி ஏற்றுள்ள நிலையில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹுசியாங் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். இதில் 6 தீவிரவாதிகள் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 15 சமுதாய பணியாளர்கள் வெடிகுண்டு சம்பவத்தில் பலியானார்கள். மேலும் 8 தீவிரவாதிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

English summary
A confrontation involving axes, knives, at least one gun and ending with the burning down of a house left 21 people dead in China’s troubled far-west region of Xinjiang, a government spokeswoman said yesterday, calling it a “terrorist attack”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X