For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தாலி வரலாற்றில் முதல் இளம் பிரதமர்!

By Mathi
Google Oneindia Tamil News

Enrico Letta
ரோம்: இத்தாலியில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் தேக்க நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் மத்திய இடது ஜனநாயக அணியின் முன்னாள் துணைத் தலைவர் என்ரிகோ லெட்டா தலைமையில் கூட்டணி அரசு அமைக்க அந்நாட்டு அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தாலி நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி, இடைக்கால பிரதமர் மரியோ மோன்டி, நகைச்சுவை நடிகர் பெப்பி கிரில்லோ, ஜனநாயக கட்சி தலைவர் லுய்கி பெர்சானி உள்ளிட்டோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். ஆனால் இவர்களது எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் தொங்கு நாடாளுமன்றத்துக்கான சூழல் உருவானது.

இதனால் 2 மாதங்களாக இத்தாலியின் நாடாளுமன்றம் முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் அந்நாட்டு அதிபரான ஜியோர்கியோ லெட்டாவை நேரில் அழைத்துப் பேசினார். அவரிடம் நிலையான ஒரு அரசை அமைக்குமாறு அதிபர் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட லெட்டா, அமைச்சரவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இத்தாலியில் நீண்டகாலம் அதிபராக இருந்த பெர்லுஸ்கோனியின் உறவினர்தான் லெட்டா. இருப்பினும் 25 ஆண்டுகால இத்தாலி நாட்டின் வரலாற்றில் 46 வயதே ஆன இளம் தலைவர் ஒருவர் பிரதமராவது இதுவே முதல் முறையாகும்.

English summary
Mr Letta, the former second-in-command in the centre-left Democratic Party, was summoned by President Giorgio Napolitano at 12.30am and given the tough task of giving Italy a stable government, two months after inconclusive elections produced a political stalemate, and four months after Silvio Berlusconi pulled the plug on Mario Monti's technocrat government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X