For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தள்ளுபடியான ஜெயலலிதா வேட்பு மனு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் திமுக அப்பீல்- கருணாநிதி அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

DMK to move SC against HC closing plea against Jayalalithaa
சென்னை: ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்ற சட்டத்தை மீறி 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஒரே நேரத்தில் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்குகள் கைவிடப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் வழக்குத் தொடரப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்ற சட்டத்தையும் மீறி 2001ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து திமுக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மறைந்த குப்புசாமியும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயனும் மேலும் சில உறுப்பினர்களும் கடந்த 9.8.2001 அன்று தேர்தல் கமிஷனுக்கு முறையீடுகள் அனுப்பினர்.

தேர்தல் கமிஷன் உடனடி நடவடிக்கை எடுக்காததினால் அப்போது திமுக நாடாளுமன்ற குழு தலைவராக இருந்த குப்புசாமி 8.3.2002 அன்று உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். குப்புசாமி தாக்கல் செய்த அந்த ரிட் மனுவின் மீது 13.6.2007 அன்று நீதிமன்றம் அளித்த
தீர்ப்பின்படி, புதுக்கோட்டை மற்றும் பரங்கிப் பேட்டை மாஜிஸ்திரேட்டுகள் முன் தேர்தல் அதிகாரிகளால் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

21.11.2012 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இந்த வழக்கை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பியது. திரும்ப அனுப்பப்பட்ட வழக்கினை விசாரித்த நீதியரசர் எலிப்பி தர்மராவ் நீதியரசர் வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு, கடந்த 6.3.2013 அன்று விசாரணை முடித்து தீர்ப்பு வழங்குவதற்காக ஒத்திவைத்தது.

இந்நிலையில் கடந்த 19.4.2013 குப்புசாமி காலமாகிவிட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் மறைந்த குப்புசாமியுடன் தேர்தல் கமிஷனுக்கு புகார் அளித்த ஏ.கே.எஸ். விஜயன், குப்புசாமி இறந்து விட்டதால் அவர் தொடர்ந்த வழக்கினை தானே தொடர்ந்து நடத்த முடிவு செய்து 22.4.2013 உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

நீதியரசர் எலிப்பி தர்மராவ் நீதியரசர் மாலா ஆகியோரைக் கொண்ட அமர்வு, விஜயனுக்கு இந்த வழக்கில் தன்னை இணைத்து தொடர்ந்து வழக்கை நடத்த உரிமை இல்லை என கூறி கடந்த 25.4.2013 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளனர்.

சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்பதால், இவ்வழக்கு விஜயனால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK chief M Karunanidhi on Saturday said his party will move the Supreme Court against the Madras High Court closing a plea against Chief Minister Jayalalithaa in a case relating to her allegedly furnishing false information while filing nomination for the 2001 assembly polls. A Division Bench of the High Court, comprising Justice Elipe Dharma Rao and Justice R Mala, had held that the petition filed by former DMK MP C Kuppusamy, who died last week, stands 'abated'. It had also dismissed a petition by DMK MP AKS Vijayan seeking to substitute himself as petitioner and continue the proceedings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X