அட்சய திரிதியை நெருங்கும் நேரத்தில் தங்கத்தின் விலை மீண்டும் குறைவு: மக்கள் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

ஒரேயடியாக விண்ணைத் தொட்ட தங்கத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து மக்கள் நகைக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று தங்கம் வாங்கினர். இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது. விலை மேலும் குறையட்டும் என்று காத்திருந்தவர்கள் இந்த விலையேற்றத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 30ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,593க்கும், ஒரு பவுன் ரூ.20,744க்கும் விற்பனை செய்யப்பட்டது. மே 1ம் தேதி கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.2,553க்கு விற்பனை செய்யப்பட்டது. பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.20,424க்கு விற்பனையானது.
அட்சய திருதியை வரும் வேளையில் தங்கத்தின் விலை குறையத் துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications