டாஸ்மாக் விளம்பரத்தில் ஜெ. படம் போட்ட தேமுதிக செயலாளர் கைது
நெல்லை: நெல்லையில் தேமுதிகவினர் முதல்வர் படத்துடன் கூடிய டாஸ்மாக் விளம்பர பேனர் வைத்த சம்பவம் தொடர்பாக தேமுதிக பகுதி செயலாளர் உள்பட 3 பேர்கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசால் வழங்கப்பட்டும் வரும் நலத்திட்டங்களில் முதல்வர் ஜெயலிலதா படம் உள்ளது. அரசு சார்பில் துவங்கப்பட்டுள்ள சலுகை விலை உணவகங்கலிலும் அம்மா உணவகம் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது டாஸ்மாக் கடைக்கு அவரது பெயரை சூட்டி, மது பாட்டில்களில் அவரது படத்தை போட வேண்டியது தானே என்று விஜயகாந்த் பேசினார்.
இந்நிலையில் நெல்லை டவுன் கம்மாநதி காமாட்சி அம்மன்கோவில் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகே தேமுதிகவினர் ஒரு வைத்தனர். அதில் தமிழக முதல்வர் படத்துடன் டாஸ்மாக் கடை பார் வசதி உள்ளது என எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அதை அகற்றினர். டவுன் இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி தேமுதிக பகுதிசெயலா ளர் மகாராஜன், துணை செயலாளர் கணேசன், வட்ட செயலாளர் சண்முகவேல் முருகன் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications