அம்மா உணவகங்களில் இன்று முதல் பொங்கல், எலுமிச்சை சாதம், சப்பாத்தி: துவங்கி வைக்கும் ஜெ.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் பொங்கல், எலுமிச்சை சாதம் மற்றும் சப்பாத்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலம் துவங்கி வைக்கிறார். இது தவிர கோவை, மதுரை உள்பட 4 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்களை அவர் துவங்கி வைக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் ரூ.1க்கு இட்லி, ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது. இந்த உணவகங்கள் துவங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 1 கோடியே 85 லட்சம் இட்லிகளும், 37 லட்சம் சாம்பார் சாதங்களும், 25 லட்சம் தயிர் சாதங்களும் விற்றுள்ளன என்று கூறப்படுகிறது.
அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பை கருத்தில் கொண்டு சென்னையில் இனி காலையில் ரூ.5க்கு பொங்கல், மதியம் ரூ.5க்கு எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம், மாலையில் ரூ.3க்கு சாப்பதி வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி இந்த வகை உணவுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படவிருக்கின்றன.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications