For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசியா முகாமில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள்: மீட்க கோரிக்கை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

இந்தோனேசியா: இந்தோனேசியா முகாமில் அவல நிலையில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஈழத் தமிழர்கள் அகதிகளாக அடைத்து வைக்கப் பட்டுள்ளனர் என்பது தெரிந்த செய்தி ஆனால் அவர்கள் எந்த நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பலரும் அறியாதது.

மேடானின் பிளவான் எனும் இடத்திலும் தான் இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மையானோர் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இங்குள்ள ஐ.டி.சி எனும் சிறப்பு முகாமில் 37 ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு சிறப்பு முகாம் என்று சொல்வதை காட்டிலும் ஒரு சிறைச்சாலை என்றே சொல்லலாம்.

Demand to rescue Lankan Tamils languishing in Indonesia

இந்த சிறையில் போதிய இடவசதியும் இல்லாமல், சத்துள்ள சுகாதாரமான உணவும் இல்லாமல் இந்த முகாம்வாசிகள் மிகுந்த துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இவர்களை கொத்தடிமைகளை போல் முகாம் அதிகாரிகள் நடத்துகின்றனர். அதிகாரிகள் இவர்களை அடித்தும் துன்புறுத்தியும் வருகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கழகத்தின் அதிகாரிகள் முகாமிற்கு பார்வையிட வந்த போதும் தமிழர்களை அதிகாரிகள் தாக்கி உள்ளனர். இங்குள்ள அகதிகளால் தங்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசவும் அனுமதி இல்லை. இதனால் இவர்கள் அனைவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் 05-04-13 அன்று எட்டு முகாம் வாசிகளை கடுமையாக தாக்கி உள்ளனர் முகாம் அதிகாரிகள். அதை தொடர்ந்து தங்களை வேறு முகாமிற்கு மாற்ற வேண்டும் என்று பட்டினிப் போராட்டம் நடத்தி உள்ளனர் இங்குள்ள முகாம்வாசிகள். ஆனால் அதற்கு எந்தவித பலனும் இல்லை.

நாடற்ற அனாதைகளாக இருக்கும் ஈழத் தமிழர்களை மீட்கவோ பாதுகாக்கவோ எந்த அரசும் அக்கறை காட்டவில்லை. எனினும் இங்குள்ள முகாம்வாசிகள் தங்களை எப்படியாவது மீட்டு ஒரு நல்ல வாழ்கையை அமைத்துக் கொடுக்குமாறு உலக தமிழ்ச் சமூகத்தையும், மனித உரிமை ஆர்வலர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த முகாமில் வாடும் ஈழத் தமிழர்கள் விவரங்கள் வருமாறு.

1. சிவநாதன் கேதுஜன் - 18 - புத்தளம்
2. தனபாலசிங்கம் பட்குனசிங்கம் - 20 - முல்லைத்தீவு
3. பாலசுந்தரம் கோகிலவரன் - 31 - மட்டக்களப்பு
4. ஆனந்தராஜா நவநீதன் - 41 - திருகோணமலை
5. செபஸ்டியன்பிள்ளை பிரேம்குமார் - 28 -யாழ்ப்பாணம்
6. அசோக ரத்தினம் மகேஷ் சங்க ரத்தினம் - 23 - புத்தளம்
7. வெள்ளந்துரை சாந்தகுமார் - 33 - வவுனியா
8. ராஜேந்திரம் கஜன் - 21 - யாழ்ப்பாணம்
9. குணம் குணலக்ஷ்மன் - 26 - யாழ்ப்பாணம்
10. தேவராஜா சலீம் கான் - 22 - முல்லைத்தீவு
11. லோகிதராஜா சுமத்திரன் - 34 -திருகோணமலை
12. கைலாயப்பிள்ளை ஆனந்தராஜன் - 26 - திருகோணமலை
13. பாலு நிமல்ராஜ் - 26 - மன்னார்
14. ஐயாகண்ணு சிவராஜா - 29 - மன்னார்
15. குழந்தைவேல் வாகீசன் - 29 - மட்டக்களப்பு
16. சுப்பையா கோகுலன் - 29 - கிளிநொச்சி
17. பாலகிருஷ்ணன் கிறிஸ்டோபர் - 17 - கண்டி
18. மூர்க்கன் ராமராஜன் - 41 - கிளிநொச்சி
19. நெல்லிநாதன் சிவநேசன் - 24 - திருகோணமலை
20. காளிமுத்து சதீஷ்குமார் - 26 - திருகோணமலை
21. ரவீன்றராஜா துஷாந்தன் - 29 - திருகோணமலை
22. சுப்பையா எசியெந்திரன் - 30 - மன்னார்
23. மகீந்திரதாஸ் நிஷாந்தன் - 22 - வவுனியா
24. ஜேம்ஸ் சுதாகரன் - 34 - மன்னர்
25. தங்கராஜா அமுர்தலிங்கம் - 28 - வவுனியா
26. ஜெயசிங்கே ஆரச்சிகே ரஞ்சித் லால் விகானி - 48 - புத்தளம்
27. கனேசமணிகுருக்கள் சசிகரன் - 40 - மட்டக்களப்பு
28. கோவிந்தப்பிள்ளை கருனைராஜா - 52 - மட்டக்களப்பு
29. செல்வராசா கிருஷ்ணராசா - 38 - யாழ்ப்பாணம்
30. ஜோகராசா சசிகரன் - 31- யாழ்ப்பாணம்
31. சந்திரகுமார் பிரதீப்குமார் - 20 - யாழ்ப்பாணம்
32. கமலநாதன் டிலக்ஷன் - 21 - மட்டக்களப்பு
33. பாலசுப்ரமணியம் சஜீவ்கன் - 25 - கொழும்பு
34. ஜோகநாதன் ரஞ்சன்குமார் - 32- வவுனியா
35. செல்வராசா விஜயகாந்த் - 32 - திருகோணமலை
36. லட்சுமணன் கீர்த்தனன் - 25 - மன்னார்
37. செல்வராசா சுரேந்திரா - 28 - கிளிநொச்சி

ஜெனிவாவில் உள்ள ஐ. நா மனித உரிமை பேரவையிடமும், சர்வதேச மன்னிப்பு சபையிடமும் இப்போது இந்த செய்தியை எடுத்து சென்று தங்களை மீட்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர் இந்த ஈழத் தமிழர்கள்.

இவர்கள் அனைவரையும் மீட்க இந்தோனேசியாவில் இருக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவ முன்வர வேண்டும். இவர்களின் உறவினர்கள் யாரேனும் வெளிநாடுகளில் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.

தமிழர் பண்பாட்டு நடுவம் [email protected]

செல் நம்பர்: 9566224027.

English summary
Tamil cultural centre has demanded the world society to resuce Lankan Tamils languishing in Indonesian jails.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X