For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 553 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

ரேண்டம் என்பது, விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் 10 இலக்க எண் ஆகும்.

ரேண்டம் எண் மதிப்பு அதிகமாக உள்ளவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவர். அந்த வகையில், இந்தாண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளுக்கு ரேண்டம் எண் இன்று காலை வெ ளியிடப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ரேண்டம் எண்ணை கணினியில் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது, முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த், துணைவேந்தர் எம்.ராஜாராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

ரேண்டம் எண்ணை www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்

எதற்காக ரேண்டம் எண்

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் மார்க் கணக்கிடப்படுகிறது.

200க்கு எடுத்த கணிதம் மதிப்பெண் 100க்கும் இதேபோல் இயற்பியல் மதிப்பெண் 50க்கும், வேதியியல் மார்க்கும் 50க்கும் மாற்றப்படும்.

அதன் அடிப்படையில் 200க்கு எத்தனை மதிப்பெண் என்பது தெரிய வரும். ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மார்க் பெறும்போது யாருக்கு முன்னுரிமை என்ற கேள்வி எழுகிறது. அந்த நேரத்தில் கணித மதிப்பெண்ணும் அதுவும் சமமாக இருந்தால் இயற்பியல் பாட மதிப்பெண்ணும் ஒருவேளை அதுவும் இணையாக இருக்கும்பட்சத்தில் (அப்போது வேதியியல் மதிப்பெண் சமமாகத்தான் இருக்கும்) பிளஸ் 2 நான்காவது பாடத்தில் உள்ள மதிப்பெண்ணை பார்ப்பார்கள்.

அந்த மதிப்பெண்ணும் சமமாக இருப்பின் பிறந்த தேதியை பார்ப்பார்கள். அதாவது யார் சீனியரோ அவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார்கள். பிறந்த தேதியும் ஒரே தேதியாக இருந்தால் ரேண்டம் நம்பர் பயன்படுத்தப்படும்.

இந்தாண்டு புதிதாக 11 பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகாரம் அளித்துள்ளதால் கூடுதலாக 3,300 இடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The list of random numbers released by the Anna university today prior to the publication of the TNEA rankings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X