For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்களில் 'தக்காளிச் சட்னியை' வரவழைக்கும் தக்காளி விலை: கிலோ ரூ.60

By Siva
Google Oneindia Tamil News

Tomato too joins the rich family
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.55க்கு விற்கப்படுகிறது. அதை வாங்கி விற்பவர்கள் ரூ.60 முதல் 65 வரை விற்பனை செய்கிறார்கள்.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்துவிட்டதால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறி விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி வரும். ஆனால் தற்போது வரத்து குறைந்துள்ளதால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறி கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் சாம்பார் வெங்காயம், பீன்ஸ், தக்காளி, இஞ்சி ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.55க்கு மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கும் பிற கடைக்காரர்கள் ஒரு கிலோ தக்காளியை ரூ.60 முதல் 65 வரை விற்கிறார்கள். ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90 முதல் 100 வரையும், ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.80 முதல் 90 வரையும், ஒரு கிலோ இஞ்சி ரூ.160 முதல் 220 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பிற காய்கறிகளின் விலை(ஒரு கிலோவுக்கு)

கத்தரிக்காய் - ரூ. 25

முட்டைக்கோஸ் - ரூ. 15

சேனைக்கிழங்கு - ரூ. 20

கேரட் - ரூ. 20

உருளைக்கிழங்கு - ரூ. 20

பாகற்காய் - ரூ. 40

சவ்சவ் - ரூ. 30

கொத்தவரங்காய் - ரூ. 30

காராமணி - ரூ. 30

கோவக்காய் - ரூ. 20

சேப்பங்கிழங்கு - ரூ. 20

பிடி கருணை - ரூ. 30

கூர் கிழங்கு - ரூ. 30

English summary
Vegetable prices keep on increasing in Tamil Nadu. A kilo tomato costs Rs. 60 while beans costs Rs. 90-100.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X