For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறக்குமதி வரி மேலும் உயர்வு: தங்கம், பிளாட்டினம் விலை அதிகரிக்கும் அபாயம்

Google Oneindia Tamil News

Government hikes gold, platinum import duty to 8% from 6%
டெல்லி: தங்கம் மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை அரசு 6 லிருந்து 8 சதவீதமாக உயர்த்தியுள்ளதால், அவற்றின் விலை மேலும் உயரலாம் எனத் தெரிகிறது. இதனால், ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 400 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 'வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்தால், நாட்டின் நிதி பற்றாக்குறை உயர வாய்ப்பு உள்ளது. எனவே, இறக்குமதியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதேசமயம் தங்கத்தின் மீதான மோகத்தை மக்கள் குறைத்துக்கொள்வதுதான் இறக்குமதியை குறைக்க ஒரே வழி' என கூறியுள்ளார்.

கடந்த ஜனவரியில், தங்கத்தின் இறக்குமதி வரியை 4 லிருந்து 6 சதவீதமாக உயர்த்தியது மத்திய அரசு. இதனால், தங்கம் விலை கூடியது. அப்போது கருத்து தெரிவித்த சிதம்பரம், ‘மேலும் வரியை உயர்த்தினால் கடத்தல் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது தங்கம் மீதான இறக்குமதி வரி 6 லிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், பற்றாக்குறை கடுமையாக உயர்ந்து, தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

English summary
The finance ministry on Wednesday announced a hike in gold import duty to 8 percent from current 6 percent in order to curb extremely high demand for the yellow metal. The government also hiked platinum import duty to 8 percent from 6 percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X