மத்திய திட்டக்குழு துணை தலைவர் அலுவாலியாவை சந்தித்து பேசிய ஜெயலலிதா
சென்னை: மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அவர் திட்டக்குழு துணை தலைவர் அலுவாலியாவை சந்தித்து பேசினார்.
2013-14ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டு தங்கள் மாநிலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பினார். அவர் இன்று திட்டக் குழு துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்து பேசினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) காலை சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். அங்கு மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவைச் சந்தித்து, 2013-2014-ம் ஆண்டு தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் மாலையிலே முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி கிளம்பிய ஜெயலலிதா பிற்பகல் 3.15 மணிக்கு நடந்த மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்திற்கு நிதி அளிக்க வலியுறுத்தினார். அவருடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அரசு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று இரவு 7.15 மணிக்கு அவர் சென்னை திரும்புகிறார்.
முன்னதாக அவர் திட்டக் குழு துணை தலைவர் அலுவாலியாவை சந்தித்து பேசினார். பருவமழை பொய்த்து வறட்சி எற்பட்டுள்ளதால் 2013-2014ம் நிதியாண்டில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு அவர் அலுவாலியாவை கேட்டுக் கொண்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications