For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ் – கார் மோதல் 5 பேர் பலி… ஒருவர் படுகாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

திருவண்ணாமலை கீழ்நாத்தூரைச் சேர்ந்த பெருமாள், தனது மனைவி, மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் வேட்டைவளம் அருகே உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட இன்று காலை சென்றுள்ளார்.காரை அவரது மகன் ரவி ஓட்டினார்.

ஏந்தல் என்ற இடத்திற்கு வந்த போது பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெருமாள், மருமகள் மஞ்சு, பேரக் குழந்தைகள் ஆர்யா, சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெருமாளின் மனைவி செல்வி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். படுகாயமடைந்த ரவி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

English summary
Five people were killed, including two children, in a bus - car crash near Tiruvannamalai on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X