For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனால்ஜின், சர்க்கரை நோய்க்கான 3 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

Google Oneindia Tamil News

மும்பை: சில மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட, பரவலாக உபயோகிக்கப்படும் சர்க்கரை நோய்க்கான பியோக்ளிடசோன், வலி நிவாரணியான அனால்ஜின், மன சோர்விற்கான டீன்சிட் ஆகிய மூன்று மருந்துகளையும் தடை செய்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

மருந்து உற்பத்தியாகும் அதன் சொந்த நாட்டிலேயே தடை செய்யப்பட்டால், உடனடியாக அம்மருந்தினை இந்தியாவிலும் தடை செய்ய வேண்உம் என்பது நமது சட்ட விதிமுறைகளில் ஒன்று. அந்த வகையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட, சில மருந்துகள் தொடர்ந்து இந்தியாவில் விற்பனையில் உள்ளன. அவற்றை முற்றிலுமாக தடை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு.

மூன்று மாத்திரைகளுக்கு தடை :

மூன்று மாத்திரைகளுக்கு தடை :

அதன் எதிரொலியாக, தற்போது பரவலாக உபயோகிக்கப்படும் சர்க்கரை நோய்க்கான பியோக்ளிடசோன், வலி நிவாரணியான அனால்ஜின், மன சோர்விற்கான டீன்சிட் ஆகிய மூன்று மருந்துகளையும் தடை செய்துள்ளது மத்திய அரசு.

உடனடியாக நிறுத்த வேண்டும் :

உடனடியாக நிறுத்த வேண்டும் :

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், அதில் குறிப்பிட்ட இந்த மூன்று மருந்துகளின் உற்பத்தியையும், விற்பனையையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு, ஏற்கனவே இந்த மாதம் 18ஆம் தேதியே அனுப்பப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் பாதுகாப்பு முக்கியம் :

நோயாளிகள் பாதுகாப்பு முக்கியம் :

நோயாளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இதய நோய்க்கும், சிறுநீரகப் பையில் தோன்றும் கான்சர் நோய்க்கும் வழிவகுக்கும் என்று கருதப்படும் சர்க்கரை நோய்க்கான மருந்தான, ‘அனால்ஜின்' ஏற்கனவே தடை செய்யப்பட்டது.

சொந்த நாட்டிலேயே தடை :

சொந்த நாட்டிலேயே தடை :

மனசோர்விற்கான டீன்சிடின் மூலக்கூறுகளை உருவாக்கி நோயாளிக்கு தீங்கை விளைவிக்கும் என கூறி அதன் உற்பத்தி நாடான டென்மார்க்கிலேயே தடை செய்யப்பட்டு விட்டது டீன்சிட் என்பது குறிப்பிடத்தக்கது.

மருந்து நிறுவனங்கள் பாதிப்பு :

மருந்து நிறுவனங்கள் பாதிப்பு :

அதே சமயம், கிட்டத்தட்ட ரூ.700 கோடிக்கு விற்பனை சர்க்கரை நோய்க்கான மருந்தை அரசு தடை செய்துள்ளதால், பல நிறுவனக்கள் பாதிப்படையும் அபாயமும் உண்டு.

கருத்துக்கணிப்பு :

கருத்துக்கணிப்பு :

கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்திய மருத்துவர்கள், தங்கள் நோயாளிகளிடம் மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்த தெளிவான அறிக்கை தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது. அதற்கு மருத்துவர்கள் தாங்கள் அவ்வாறே செய்வதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

English summary
The Health Ministry has banned three medicines in a move to avert the health risks associated with them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X