For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவூதியில் ‘கும்பலாக’ தற்கொலை செய்யப் போவதாக மிரட்டும் 33 ராஜஸ்தான் தொழிலாளர்கள்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: போலியான நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு சவூதியில் வாடும் 33 ராஜஸ்தான் தொழிலாளர்கள் தக்களை மீட்க அரசு முயற்சி செய்யவில்லை எனில் கும்பலாக தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

ஜெய்ப்பூர் நகரில் கமல் சோனி என்பவர் நடத்தும் டிராவல் நிறுவனத்தின் மூலம், சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு அனுப்பப் பட்டனர் 33 ராஜஸ்தான் தோழிலாளர்கள். மாதச்சம்பளம் 21,000 என ஆசையில் அவூதி சென்றவ்ர்களுக்கு, அங்கு சென்ற பிறகு தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

கமல் கூறியது போலி நிறுவனம் என்பது இத்தொழிலாளர்கள் அங்கு சென்றடைந்த பிறகு தான் உறுதியானது. ஏற்கனவே, இந்த வேலைக்காக அவர்கள் தலா ஒரு லட்ச ரூபாயை கமலிடம் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு கூலி வேலைகள் செய்து இரண்டு மாதங்களை சவூதியில் ஓட்டிய அவர்கள் தற்போது எந்த வேலையும் இன்றி வாடி வருகின்றனர். சொந்த ஊருக்கு திரும்பவும் அவர்களிடம் பணப் பற்றாக்குறை.

இது குறித்து, ராஜஸ்தான் மாநில முதலமைச்சருக்கு பலமுறை தகவல் அனுப்பியும் அவர்களுக்கு உதவிகள் எதுவும் கிடைக்கப் பெறாததால், தற்போது தாங்கள் கும்பலாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் அத்தொழிலாளர்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ராஜஸ்தானிய மக்களின், வட அமெரிக்காவின் ராஜஸ்தான் சங்கம் என்ற அமைப்பிதலைவர் பிரேம் பண்டாரி கூறுகையில், ‘இவர்களுக்காக கடந்த இரண்டு மாதங்களாகத் தாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த 33 பேரிடமும் அவசர பயண சான்றிதழ் இருக்கும்போதிலும், வேலை மற்றும் தங்குமிடம் குறித்த அனுமதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், உள்ளூர் அதிகாரிகள் இவர்களது கைவிரல் ரேகைகளை இன்னும் விமான நிலைய அதிகாரிகளிடம் அளிக்கவில்லை. இவர்களிடமும் பணமில்லாத காரணத்தினால் இவர்களால் உடனடியாக சவுதியை விட்டு வெளியேற முடியவில்லை. சவுதி அரேபியாவில் இயங்கிவரும் ராஜஸ்தான் சர்வதேச அமைப்பும் இணைந்து இந்தத் தொழிலாளிகளுக்கு இருப்பிடம், உணவு போன்ற தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், பசியால், பட்டினியால் இறப்பதை விட தற்கொலை செய்து கொள்வது கௌரவமானது என கருதுவதாக அங்குள்ள தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
A group of 33 daily wage earners from Rajasthan who are stranded in Saudi Arabia for the past two months have threatened mass suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X