For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மபுரி திவ்யாவுக்கு வரும் 20ம் தேதி மன நல கவுன்சிலிங்

Google Oneindia Tamil News

Family agrees to counseling for Divya in Dharmapuri
தர்மபுரி: திவ்யா, அவரது அம்மா மற்றும் சகோதரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி வரும் 20ஆம் தேதி கவுன்சிலிங் வழங்கப்பட இருக்கிறது.

தர்மபுரியில், பல்வேறு எதிர்ப்புகளை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் திவ்யா-இளவரசன். இந்நிலையில் கடந்த 3ம் தேதி இளவரசனை விட்டுப் பிரியப் போவதாக திவ்யா அறிவித்த மறுநாள், தர்மபுரியில் அரசு கல்லூரி பின்புறம் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார் இளவரசன்.

இளவரசன் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஒருபுறம் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வரும் வேளையில், தனது தந்தை நாகராஜ் மற்றும் கணவர் இளவரசன் ஆகியோரை இழந்துள்ள திவ்யாவுக்கும், அவரது குடும்பத்திற்கும் மன நல ஆலோசனை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு முதலில் திவ்யாவின் சம்மதம் எதிர்பார்க்கப் பட்டது. அதற்காக முறைப்படி நீதிமன்றம் சார்பில் ஒரு சம்மன் அனுப்பப் பட்டது. சம்மனைப் பெற்றுக் கொண்ட திவ்யா குடும்பத்தினர், நேற்று, மனநல ஆலோசனைக்கு திவ்யா சம்மதம் தெரிவித்திருப்பதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, வரும் 20ம் தேதி,அவர்கள் மன நல ஆலோசனை பெற வருவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

English summary
It was part of the court directive to ensure counseling to Divya as she has been under tremendous mental stress after the death of her father, Nagarajan, 1nowElavarasan and the entire mental and emotional stress after the marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X