For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்ண எடுத்துடாதீங்க, நா உயிரோடதான் இருக்கேன்: கதறி எழுந்த ‘இறந்த பெண்’

Google Oneindia Tamil News

லண்டன்: மூளைச்சாவு அடைந்ததாக கருதி கண்களை அகற்ற முயன்ற போது, சம்பந்தப்பட்டப் பெண் திடீரென எழுந்து அமர்ந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அமெரிக்காவில், அளவுக்கு அதிகமாக சில அபாயகரமான மருந்துகளை எடுத்துக் கொண்டதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு 2009ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் கொலீன் எஸ் பர்ன்ஸ் என்ற இளம் பெண் ஒருவர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரைக் காப்பாற்றுவது கடினம் எனக் கூறிவிட்டனர். கொலீன் மூளைச் சாவு அடைந்து விட்டதாக கூறி அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோரிடம் அனுமதி கேட்டனர்.

அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே, முதல்கட்டமாக கண்களை ஆபரேஷன் செய்ய முடிவு செய்யப் பட்டது. ஆபரேஷனுக்கு மருத்துவர்கள் நிலையில், திடீரென எழுந்து அமர்ந்துள்ளார் கொலீன். இதனால், அதிர்ந்து போன வரது பெற்றோருக்கு மருத்துவர்கள் தவறுதலாக கொலீன் மூளைச் சாவு அடைந்து விட்டதாகக் கூறியது தெரிய வந்தது.

கோபத்தில், மருத்துவமனை மற்றும் தவறான அறிவிப்பை வெளியிட்டு கொலீனுக்கு உடல் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய மருத்துவர்கள் மீது வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணை முடிவில் தவறு செய்த மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுக்கு இருபத்திரெண்டாயிரம் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர் நீதிபதிகள்.

English summary
A patient who had been declared 'dead' opened her eyes just as doctors prepared to remove her organs in a hospital here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X