For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரேந்திர மோடியோட சந்தை மதிப்பு வெறும் ரூ5 தானா? வெறுப்பேற்றும் காங்கிரஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசும் கூட்டத்துக்கு ரூ5 என டிக்கெட் கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம் அவருடைய உண்மையன சந்தை மதிப்பு இதுதானா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் லால் பகதூர் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 11-ந் தேதியன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் சுமார் 1 லட்சம் இளைஞர்களைத் திரட்டுவதற்கு மாநில பாஜக மும்முரம் காட்டி வருகிறது. 18 வயது முதல் 40 வயது வரையிலானவர்களை அழைத்து வருவதற்காக ஒரு வித்தியாசமான திட்டத்தை அறிவித்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்போர் ரூ5 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி முன்பதிவையும் தொடங்கியது பாஜக. இதுவரை 40 ஆயிரம் பேர் ரூ5 கட்டணம் செலுத்தி உள்ளனர்.

இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக கிண்டலடித்துள்ளது. ஏற்கெனவே காங்கிரஸை ‘மதசார்பின்மை முகமூடி' அணிந்த கட்சியாக விமர்சிர்த்ததால் தொடர்ந்தும் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார் மோடி. இந்த நிலையில் மோடியின் ஹைதராபாத் கூட்ட ஏற்பாடுகளையும் நக்கலடித்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, ஒரு மகானை பார்க்க போகனும்னா ரூ100 முதல் ரூ1 லட்சம் வரை டிக்கெட் வாங்கனும். ஒரு சினிமா..அது தேறாத படமா இருந்தாலும் ரூ200-500 வரை டிக்கெட் கொடுக்கனும். ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேச்சை கேட்க ரூ5தானாம்.. இதில் இருந்தே அவரது சந்தை மதிப்பு என்ன என்பது தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

English summary
Congress today took a dig at the BJP for its move to charge Rs 5 per ticket for attending Narendra Modi's public meeting in Hyderabad, saying it shows the "true value" of the Gujarat Chief Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X