For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெப்ட்யூனின் 14வது நிலாவைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு புதிய நிலவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹப்பளி தொலைநோக்கி மூலம் இந்த புதிய நிலா குறித்த இருப்பு தெரிய வந்துள்ளது.

நெப்ட்யூனைச் சுற்றி இது வலம் வந்து கொண்டுள்ளதாம். இது நெப்ட்யூனின் 14வது நிலாவாகும்.

நீல பச்சை கிரகம்

நீல பச்சை கிரகம்

நெப்ட்யூன் நீலம் மற்றும் பச்சை நிறத்திலான கிரகம் ஆகும். இந்த கிரகத்திற்கு இதுவரை 13 நிலாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹப்பிள் கண்டுபிடித்த 14வது நிலா

ஹப்பிள் கண்டுபிடித்த 14வது நிலா

இந்த நிலையில் நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு நிலவைக் கண்டுபிடித்துள்ளனர் ஹப்பிள் துணையுடன். இது அக்கிரகத்தின் 14வது நிலாவாகும்.

நிலாவுக்குப் பெயர் வச்சாச்சு

நிலாவுக்குப் பெயர் வச்சாச்சு

இந்த நிலாவுக்கு S/2004 N 1 என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலவின் சுற்றளவு 19 கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நெப்ட்யூனின் நிலவுகளிலேயே இதுதான் சிறியதாம்.

மங்கலாத் தெரியுதே...

மங்கலாத் தெரியுதே...

இந்த நிலவானது சிறிதாகமட்டுமல்லாமல், மங்கலாகவும், பிரகாசம் இன்றியும் காணப்படுகிறது. ஒரு நட்சத்திரத்தை விட 100 மடங்கு டிம்மாகவும் இது காணப்படுகிறது.

ஜூலை 1ம் தேதி கண்டுபிடித்தார்கள்

ஜூலை 1ம் தேதி கண்டுபிடித்தார்கள்

கடந்த ஜூலை 1ம் தேதி இந்த நிலாவைக் கண்டுபிடித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

English summary
The Hubble space telescope has found a new moon orbiting Neptune, the 14th known to be circling the blue-green planet, US space agency NASA said. The moon, designated S/2004 N 1, is estimated to be no more than 19 km across, making it the smallest known moon in the Neptunian system, Xinhua cited NASA as saying in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X