For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மந்த கதியில் பொருளாதாரம்.. பிரதமர் மன்மோகன்சிங் கவலை

By Mathi
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருப்பது கவலை அளிக்கிறது. தேக்க நிலை, நிதி பற்றாக்குறையை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்புக் கணக்கு பாற்றாக்குறைக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த தங்கத்தின் மீதான முதலீட்டை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் சாதகமான சூழலை உருவாக்கி இருக்கிறது.

இன்னமும் நாம் பலமுனைகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. நமது பொருளாதார வளர்ச்சி இலக்கு 6.5% ஆக நிர்ணயித்திருக்கிறோம். கடந்த ஓராண்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்னிய முதலீட்டுக் கொள்கை தளர்த்தப்பட்டிருகிறது. புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்கும் கொள்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.

English summary
Prime Minister Manmohan Singh is addressing the 92nd annual session of trade lobby Assocham. He has shared the government's plans to stem the worrying slide of the rupee and to lift a flagging economy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X