For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில், டாடியின் ஸ்மார்ட்போனில் கார் புக் செய்த 1 வயது ‘சுட்டிப்பாப்பா’

Google Oneindia Tamil News

One-year-old US girl buys car using father's smartphone
நியூயார்க்: அப்பாவின் ஸ்மார்ட் போனில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக காரை வாங்க சம்மதம் தெரிவித்து அனுப்பிய செய்தியால், அவளது அப்பா அந்தக் காரை வாங்க வேண்டிய நிர்பந்தத்திர்கு தள்ளப்பட்ட வேடிக்கைச் சமபவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரில் வாழ்ந்து வரும் பால் ஸ்டவுட்க்கு சமீபத்தில் கார் கம்பெனி ஒன்றிலிருந்து நோட்டீஸ் ஒன்று அனுப்பப் பட்டிருந்தது. அதில், நீங்கள் ஆன்லைனின் டிரேடிங் மூலம் ஒரு கார் வாங்கியிருக்கிறீர்கள். அதன் விலை ரூ.13 ஆயிரம் அதை செலுத்திவிட்டு காரை ஓட்டி செல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸைக் கண்டு முதலில் அதிர்ந்த பால், தான் அவ்வாறு கார் வாங்கவில்லை என வாதிட்டார். பின்னர் அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்த போது தான் நடந்த விபரீதம் புரிந்தது. பாலின் ஸ்மார்ட் போனில் விளையாடிக் கொண்டிருந்த அவரது ஒரு வயது சுட்டிப்பாப்பா தவறுதலாக கார் வாங்க சம்மதம் தெரிவித்து செய்தி அனுப்பியது தெரிய வந்தது.

மேலும் இது குறித்து பால்ஸ்டூயட் சிரித்துக் கொண்டே கூறும்போது, ‘‘நல்லவேளை மிக குறைந்த விலையிலான காரை எனது மகள் தேர்வு செய்து இருக்கிறாள். இல்லாவிட்டால் அதற்குரிய பணத்தை என்னால் செலுத்தியிருக்க முடியாது. ஆனால், இந்தத் தவறு மீண்டும் ஒருமுறை நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என தெரிவித்தார்.

ஒருவழியாக பணாத்தை செலுத்தி காரை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார் பால். இப்போது 1962-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ‘ஆஸ்டின்-ஹீலே ஸ்பரிட்' ரக காரில் தான் குடும்பத்தோடு வலம் வருகிறார்களாம்.

English summary
A one-year-old girl in the US has bought a car through online trading, while playing on the mobile phone of her dad, who has decided to keep the "purchase".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X