For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலவசம்னா என்ன?: வரையறை செய்ய வருகிறது...தேர்தல் கமிஷனின் அனைத்துக்கட்சி கூட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்படும் இலவசங்கள் பற்றிய வரையறுப்பை உண்டாக்குவதற்காக வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வந்தாலே, ஒவ்வொரு கட்சியும் என்ன இலவச அறிவிப்புகள் தரப் போகின்றன என சூதாட்டமே ஆரம்பித்து விடுவார்கள் போல. அவ்வளவு இலவசங்கள். அதிலும் தமிழகத்தில் சொல்லவே வேண்டாம்.

தமிழக இலவசங்கள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு விடுப்பு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிடும் இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்' என தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டது.

எனவே, வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது தேர்தல் கமிஷன். அக்கூட்டத்தில் இலவசங்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது பற்றி அனைத்துக் கட்சிகளிடமும் ஆலோசனைப் பெறப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

English summary
The Election Commission will hold a meeting of various political parties on August 12 for framing guidelines on 'freebies' in election manifestos following directions of the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X