For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதியன புகுதலும்... பழையன கழிதலும்... : சீனாவில் விஸ்வரூபம் எடுக்கும் ‘காலி நகரங்கள்’

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் நூதனமான ஒரு பிரச்சினையை அந்த நாடு சந்திக்க ஆரம்பித்துள்ளதாம்.

நகரங்கள் பெருகி வருவதாலும், நகர்ப்புறமயமாக்கள் அதி வேகமாக நடைபெறுவதாலும் பல நகரங்களில் மக்கள் வசிக்காத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.

புதிது புதிதாக உருவாக்கப்படும் நகரங்கள் காரணமாக பழைய நகரங்கள் பெரும்பாலானவை கிட்டத்தட்ட காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.

பேய் நகரங்கள் போல

பேய் நகரங்கள் போல

இதுகுறித்து சீன நகர்ப்புற வளர்ச்சி மையத்தின் துணை இயக்குநர் குவோ ரன்லிங் கூறுகையில், பல நகரங்களில் மக்களே இல்லாத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாமல், பேய் நகரங்கள் போல அவை மாறஇ வருகின்றன.

அதிவேகமாகும் நகர்ப்புறமயமாக்கல்

அதிவேகமாகும் நகர்ப்புறமயமாக்கல்

சீனாவில் தற்போது நகர்ப்புறமயாக்கல் அதி வேகமாக நடைபெறுவதே இந்த நிலைக்குக் காரணம்.

ஒவ்வொரு நகரிலும் புது நகரம்

ஒவ்வொரு நகரிலும் புது நகரம்

தற்போது சீனாவில் உள்ள ஒவ்வொரு பெரிய மற்றும் நடுத்தர நகரங்களில் துணை நகரம் உருவாக்கும் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் நிலைமை மோசமாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

புதுநகரங்கள் மீது மோகம்

புதுநகரங்கள் மீது மோகம்

புதிதாக உருவாக்கப்படும் நகரங்கள், பழையதை விட பெரிதாகவும், சகல வசதிகளுடனும் இருப்பதால் அந்த நகரங்களில் குடியேற மக்கள் விரும்புகிறார்கள்.

அனாதைகளாகும் பழைய நகரங்கள்

அனாதைகளாகும் பழைய நகரங்கள்

இதன் காரணமாக பழைய நகரங்களை அவர்கள் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேவைக்கு அதிகமான நகரங்கள்

தேவைக்கு அதிகமான நகரங்கள்

சீனாவில் தற்போது தேவைக்கும் அதிகமான அளவில் நகரங்கள் பெருகி விட்டன. இது அபாயகரமான விளைவையே ஏற்படுத்தும் என்றார் அவர்.

'சிட்டி'யில் மட்டும் 50 சதவீத மக்கள்

'சிட்டி'யில் மட்டும் 50 சதவீத மக்கள்

சீனாவில் நகரங்களில் வசிப்போரின் எண்ணிக்கை 2010ம் ஆண்டு நிலவரப்படி 50 சதவீதமாக இருந்தது. இது தற்போது மேலும் அதிகரித்திருக்கும் என்று கருதப்படுகிறது.

English summary
In a grim warning against rapid urbanisation in China, a top development official has said that reckless expansion of cities has turned many of them into ghost towns with no occupants in sight. Qiao Runling, deputy director of the China Centre for Urban Development, said local governments had relied on quick urbanisation to stimulate economic growth and generate fiscal revenue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X