For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தின உரையில் மத்திய அரசுக்கு கன்டிஷன்கள் போட்ட நிதிஷ் குமார்

By Siva
Google Oneindia Tamil News

Nitish Kumar
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது சுதந்திர தின உரையில் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில்,

மத்திய அரசு பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். சில முன்னேற்ற முன்மாதிரிகளால் சிலர் தான் பலனடைகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை. அனைத்து வகையான முன்னேற்றத்தையும் உள்ளடக்கிய மாதிரி தான் வேண்டும். அதை தான் இங்கே செய்து கொண்டிருக்கிறோம். (குஜராத் முதல்வர் மோடியைத் தான் இடித்துக் காட்டியுள்ளார்)

1வது முதல் 10வது வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். வரும் 2015ம் ஆண்டுக்குள் பீகாரில் தடையில்லா மின்சாரம் மற்றும் அனைத்து கிராமங்களிலும் 12 மணிநேரம் மின்சாரம் ஆகியவை கிடைக்காவிடில் நான் மறுபடியும் முதல்வராக போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே தெரிவித்ததை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்கிறேன் என்றார்.

English summary
Bihar CM Nitish Kumar in his independence day speech urged centre to give special status to his state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X