For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழைகளை சிரிக்க விடாமல் தடுக்கும் தங்கம்!

Google Oneindia Tamil News

- கே.என்.வடிவேல்

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்த நிலை மாறி, மீண்டும் கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என அறிஞர் அண்ணா அன்று சொன்னார். ஆனால் வரும் காலத்தில் ஏழைகள் சிரிக்கவே முடியாத நிலை ஏற்பட்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கம் விலை அந்த அளவுக்கு உயர்ந்தபடி இருக்கிறது.

தமிழகத்தில் ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையில் ஒன்றாகிப் போன தங்கத்தின் விலை தாறுமாறாக எகிறி வருவதால் திருமணத்தை எதிர் நோக்கியுள்ள பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நிலைகுலைந்து போயுள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில் தான் தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் குறைந்த அளவே தங்கம் உற்பத்தி ஆவதால், தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு, மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்பதால், மக்கள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.

கொடுமுடி லதா

தங்கம் விலை உயர்வு குறித்து கொடுமுடியைச் சேர்ந்த லதா என்பவர் கூறுகையில்,

ஏழை எளிய மக்களின் ஒரு அங்கமாக தங்கம் விளங்கி வருகின்றது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் வீட்டில் நடைபெறும் காது குத்து, பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், திருமணம், கோவில் விழா போன்ற அனைத்து விஷேங்களிலும் தங்கத்தை வைத்தே விழாக்கள் நடைபெறுகின்றது.

மேலும், திருமணத்தின் போது, பெண் வீட்டார் தங்களது மகளுக்கு ஒரு குண்டுமணி் அளவாவது தங்கத்தை போட்டு அழகு பார்ப்பது வாடிக்கையாக உள்ளது. தங்கம் இன்றி எந்த விழாவும் நடைபெறுவதில்லை. இதனாலேயே தமிழக மக்கள் தங்கத்தை தங்களது வீட்டில் ஒரு அங்கமாக வைத்துள்ளனர்.

மேலும், தங்கத்திற்கு கொடுக்கும் அதே மதிப்பை மற்ற விலை உயர்ந்த பொருளான பிளாட்டினத்திற்கு கொடுப்பதில்லை.

தங்கம் வீட்டில் இருந்தால், அதை கவுரமாக நினைக்கின்றனர். பெண்கள் காது, கழுத்து, இடுப்பு என அணிந்து கொள்கின்றனர். ஆண்கள் கையிலும், கழுத்திலும் அணிந்து கொள்கின்றனர் என்று தங்கத்தின் மதிப்பை கூறியவர், இப்படி மக்கள் வாழ்வில் அங்கமாக உள்ள தங்கத்தின் விலையை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக் வேண்டும். அப்போது தான் பொது மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடுவார்கள் என்றார்.

பு.க.வேலுமணி

கரூர் மாவட்ட் அதிமுக நிர்வாகி பு.க.வேலுமணி என்பவர் கூறுகையில்,

தமிழக மக்கள் தங்கத்தை ஒரு சேமிப்பாகவே கருதுகின்றனர். பணத்தை வீட்டில் வைத்தால் களவு போய்விடும். மேலும், குடும்பல செலவு பல உள்ளதால் உடனே செல்வாகிவிடும். ஆனால், தங்கம் இருந்தால் தேவையான போது, தேவையான அளவு அடமானம் வைத்துக் கூடம் பணம் பெற முடியும்.

ஏன் வங்கிகள் கூட தங்கத்திறகு மட்டும் தான் கடன் கொடுக்கின்றது. மற்ற விலை உயர்ந்த பொருட்களான பிளாட்டினம், வெள்ளிக்கு அடமான கடன் கொடுப்பதில்லை. இதனால் தான் பொது மக்கள் தங்கத்தை நம்பி வாங்குகின்றனர். அதில் குறைந்த அளவு முதலீடு கூட செய்கின்றனர்.

தமிழகத்தில் பெண் குழந்தைகள் அதிகம் உள்ள வீடுகளில் மாதம் ஒரு கிராம் தங்கம் வாங்கி சேமிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். சிலர் தங்களது பண வசதிக்கு ஏற்ப ஒரு சவரன் முதல் பல சவரன் வரை வாங்குகின்றனர்.

தமிழக்ததில் பெண்கள் திருமணத்தின் போது தங்கம் தவிர்க்க இயலாது என்பதற்கு ஒரு உதாரணம். நடைபெற்று முடந்த தேர்தலின் போது கூட தாலிக்கு தங்கம் என்று அதிமுக கூறியது. அதே போல ஏழை எளிய திருமணம் ஆகாத பெண்களுக்கு இன்று வரை அரசே தனது செலவில் தாலி செய்ய தங்கம் கொடுத்து உதவுகின்றது.

அப்படி இருக்கும் போது, தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறி்க் கொண்டே சென்றால், ஏழை எழிய மக்கள் என்ன செய்லாவர்கள். எப்படி தங்களது வீட்டு விஷேசத்தை நடத்துவார்கள்.

தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவ மடிக்கணிணி , இலவச சைக்கிள், பொது மக்களக்கு இலவ அரி்சி, இலவச காப்பீடு திட்டம், மின் விசிறி, கிரைண்டர், மிக்க்ஷி, போன்றவைகள் எல்லாம் இலவசமாக கொடுத்துள்ளார் முதல்வர். ஏன் ஏழை எளிய பெண்கள் திருமணத்திற்கு இலவதமாக தங்கத் தாலியே முதல்வர் ஜெயலலிதா அரசு கொடுக்கின்றது.

ஆனால், மாநில அரசை விட சர்வ வல்லமை பொருந்தியாக கூறும் மத்திய அரசால், தங்கத்தின் விலையை கட்டுப்பாடக வைத்திருக்க முடியாதா. முடியும். முடியாது என்று சொன்னால் எதிற்காக இந்த அரசு. ஜெயலலிதா பிரதமர் ஆகும் காலம் விரைவில் வரும் அப்போது பாருங்க. தங்கத்தின் விலை கண்டிப்பாக கட்டுப்பாடாக இருக்கும் என்றார்.

மதுரை சண்முகசுந்தரம்

Shanmugan

மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் கூறுகையில், இந்திய தங்க வர்த்தகத்தில் நிறைய மோசடிகள் உள்ளது. தங்க வர்த்தகத்தை மத்திய அரசு முறைப்படுத்தவில்லை. வெளி நாடுகளில் எல்லாம், நகைக் கடைகளில் சேதாரம் என்று இல்லை. ஆனால், சேதாரத்திற்கு பணம் வாங்குவதில்லை. அப்படியே சேதாரம் என்று போட்டால் கூட சேதார நகையை திருப்பி கொடுத்துவிடுவார்கள். இங்கே தங்க நகையை காட்டிலும், 916 மற்றும் பி.ஐ.எஸ் தனியாக கூடுதல் பணம் வசூல் செய்கின்றனர்.

தங்க நகையை விற்கும் போதும், செய் கூலி, தேதாரம் போட்டு கழித்து முடிந்த வரை குறைந்த விலையில் எடுத்து, பாலிஸ் போட்டு புது நகை போல் விற்பனை செய்யும் கொடுமையும் நடக்கின்றது.

மேலும், ஒரு நாள் முழு விற்பனையை கணக்கில் காட்டுவதில்லை. இதே போல தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுக்க கணக்கு பாருங்க. அரசுக்கு எத்தனை கோடி நஷ்டம். வரி ஏய்ப்பு நடக்கின்றது. கடைகளில் பி்ல்கள் வழங்குவதில்லை. சிட்டை மட்டுமே வழங்குகின்றனர்.

இது போன்ற முறைகேடுகளை தடுத்தாலே அரசுக்கு பல கோடி வருமானம் கிடைக்கும். இதை அரசு செய்ய முன்வருவதில்லை. ஆனால் பொது மக்களை குற்றவாளி ஆக்குவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

மேலும், தங்கம் விலை ஏறி இறங்கி, ஊசலாடிக் கொண்டு இருப்பதற்கு காரணம், இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ஏற்ற இறக்கமாக இருப்பதே முக்கிய காரணி ஆகும். ஏன் எனில் தங்கத்தின் விலை டாலரில் தான் நிர்ணயக்கப்படுகின்றது என்கிறார்.

தங்கம் தன்னை வருத்திக் கொண்டு தான் ஆபரணமாக மாறுவதைப் போல், இன்று தங்கம் வாங்குபவர்களும் தன்னை வருத்திக் கொண்டு தான் வாங்கும் நிலை உள்ளது.

Raising price of Gold has irked the people, in general women.

English summary
Raising price of Gold has irked the people, in general women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X