For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத்தீவு, காமன்வெல்த் விவகாரம்.. லோக்சபாவில் தொடர்ந்து கலக்கும் தம்பித்துரை- டி.ஆர்.பாலு!

By Mathi
Google Oneindia Tamil News

DMK urges to suspend Sri lanka from Commonwealth
டெல்லி: இருவேறு துருவங்களாக எதிரிகளாக செயல்பட்டாலும் கட்சி வேறுபாடின்றி திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் அதிமுக எம்.பி. தம்பித்துரையும் நாள்தோறும் தமிழக பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். இன்றும் இருவரும் கச்சத்தீவு மற்றும் காமன்வெல்த் மாநாடு விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் பிரச்சனையை எழுப்பினர்.

லோக்சபாவில் பேசிய திமுக எம்.பி. டி..ஆர். பாலு, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். போருக்கு பின் இலங்கையில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். தமிழர்கள் காணாமல் போனதை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் உறுதிபடுத்தியிருக்கின்றன என்றார்.

இதேபோல் கச்சத்தீவு பிரச்னையை எழுப்பிய பேசிய அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை, கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனிடம் இருந்தது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்தது தவறு .இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதே மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வாகும் என்றார்.

English summary
DMK MP T.R. Baalu told in parliament, India to take steps to ensure that Sri Lanka is suspended from the comity of Commonwealth nations for its human rights violations against ethnic Tamils
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X