சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடிய 50 பேரை கைது செய்த போலீஸ்! பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாட முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர். தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடுவோம் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோயிலுக்குள் நுழைந்து தேவாரம் பாட முயன்ற 50 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றி, சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் உள்ள புகழ் பெற்ற நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாட அங்குள்ள தீக்ஷிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் தமிழ் சிவாச்சாரியார்களுக்கும் இடையே பிரச்சினை நிலவுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு தேவரம் பாடுவதற்கு கோவில் தீக்ஷிதர்கள் தடை போட்டு விட்டனர். இதை எதி்ர்த்து போராட்டங்கள் நடந்ததையடுத்து தேவாரம் பாடலாம், ஆனால் மேடையில் இருந்து பாடக் கூடாது, கீழே உள் மண்டபத்தில் இருந்தபடிதான் பாட வேண்டும் என்று கூறினர்.

திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் கடந்த 2008ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து தீக்ஷிதர்கள் சார்பில் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்தது.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீட்சிதர்களுக்கும் தமிழ் சிவாச்சாரியர்களுக்கும் அவ்வப்போது பிரச்சினை உருவாகி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆலயத்தில் ஆறு நாட்கள் தேவாரம் பாட தெய்வத் தமிழ்ப் பேரவை சில தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தது.

தீட்சிதர்கள் ஆதிக்கம்

தீட்சிதர்கள் ஆதிக்கம்

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்ச் சிவநெறியின் தலைமைத் திருக்கோயிலாக விளங்குவது சிதம்பரம் நடராசர் ஆலயம்! அத்திருக்கோயில் சோழப் பேரரசர்களாலும், சிவநெறிச் செல்வர்களாலும் எழுப்பப்பட்டது. ஆனால் அத்திருக்கோயிலில் பின்னர் புகுந்து கொண்ட ஸ்மார்த்தர்களாகிய தீட்சிதர்கள், தமிழ்ச் சிவநெறிக்குப் புறம்பாகவும், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளுக்குப் புறம்பாகவும் இந்திய அரசமைப்புச் சட்ட விதி 25 (b)க்கு எதிராகவும், ஒருசாதி ஆதிக்க நிலையமாக அதை நிர்வகிக்கின்றனர்.

தேவார திருமுறைகள்

தேவார திருமுறைகள்

எந்த ஒரு தனிப்பிரிவிற்கும் தனிப்பட்ட குல தெய்வம் அல்லர் நடராசர். "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்றார் மாணிக்கவாசகர். இவர்களின் முன்னோர்கள் நந்தனாரை இழிவுபடுத்தினர்; தேவாரத் திருமுறைகளை மறைத்துக் கொண்டு தர மறுத்தனர் தீட்சிதர்கள். தமிழ்ப் பேரரசன் இராசராசன் அவற்றை மீட்டார்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு

வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு

நம் காலத்தில் சைவநெறியாளர் ஆறுமுகசாமி அவர்கள் சிற்றம்பலமான கனகசபை மேடையில் ஏறி நின்று, தேவாரம் பாடியபோது அவரைத் தாக்கிக் காயப்படுத்தி வெளியே தள்ளினர் தீட்சிதர்கள். கடந்த 13.02.2022 அன்று சிதம்பரம் நகரைச் சேர்ந்த செயசீலா என்பவர் சிற்றம்பல மேடையில் ஏறிவழிபடச் சென்றபோது, அவரைத் தீட்சிதர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார்கள். அப்பெண்மணி புகார் மனுக் கொடுத்துக் காவல் நிலையத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

6 நாட்கள் தமிழ் மந்திர பாடல்கள்

6 நாட்கள் தமிழ் மந்திர பாடல்கள்

தீட்சிதர்களின் தீச்செயல்களைக் கண்டித்தும், சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் - திருவாசகம் - திருமந்திரம் போன்ற தமிழ் மந்திரப் பாடல்களைப் பாடி தில்லை நடராசரை வழிபட உரிமை கோரியும் முதல் கட்டமாக தெய்வத் தமிழ்ப் பேரவையினர் 28.02.2022 முதல் 5.3.2022 வரை நாள்தோறும் சிதம்பரம் நடராசர் திருக்கோயில் திருச்சிற்றம்பல மேடை ஏறிப் பாடி வழிபட உள்ளனர்.

கோரிக்கைகள்

கோரிக்கைகள்

தமிழ்நாடு அரசே, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 25 (b)-க்கு எதிராகச் சிதம்பரம் நடராசர் கோயிலில் செயல்படும் தீட்சிதர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் முதலிய திருமந்திரங்கள் ஓதி, நடராசரை வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றி, சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும் எனவும். சிற்றம்பல மேடையேறி நடராசரை வழிபடச் சென்ற பெண்ணைத் தாக்கியவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+