For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழை குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத்தர அரிய வாய்ப்பு.. 10 நிமிடம் போதும்.. இதை படிங்க புரியும்!

போனை எடுங்கள் இந்தியாவிற்கு கற்பியுங்கள்.. இந்திய மக்களுக்கு பாடம் கற்பிப்பதில் இருந்து நீங்கள் ஒரு போன் கால் தூரத்தில்தான் இருக்கிறீர்கள்.

டெல்லி: போனை எடுங்கள் இந்தியாவிற்கு ஸ்போக்கன் ஆங்கிலத்தை கற்பியுங்கள்.. இந்திய மக்களுக்கு ஆங்கிலம் பேசுவதை சொல்லிக் கொடுப்பதிலிருந்து நீங்கள் ஒரு போன் கால் தூரத்தில்தான் இருக்கிறீர்கள்.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிகர் நேச்சுரல்ஸ் சாந்தி அம்லா (Nihar Naturals Shanti Amla) நிறுவனம் போனை எடுங்கள் இந்தியாவிற்கு ஸ்போக்கன் ஆங்கிலத்தைக் கற்பியுங்கள் என்னும் #PhoneUthaoIndiaKoPadhao என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை குழந்தைகளின் கல்விக்காகக் மேற்கொண்டு வருகிறது.

#PhoneUthaoIndiaKoPadhao அல்லது போனை எடுங்கள் மூலம் நகரத்தில் இருக்கும் படித்த மக்கள் கிராமத்தில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஸ்போக்கன் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முடியும். இதன் மூலம் தொடக்கத்தில் 55,000 நிமிடங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

A Call for better English Educated India: Ab bas ‘Phone Uthao, India Padhao’

உங்களுக்கு வர கூடிய அந்த போன் காலை எடுத்து கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவிடுங்கள். உங்கள் வாரத்தில் இதற்கு நீங்கள் 10 நிமிடம் மட்டுமே செலவு செய்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

#PhoneUthaoIndiaKoPadhao க்கு ரிஜிஸ்டர் செய்யும் நபர்கள் உங்கள் வாரத்தில் ஒரே ஒரு நாளில், 10 நிமிடத்தை மட்டும் செலவு செய்ய வேண்டி இருக்கும். இதன் மூலம் நீங்கள் போன் கால் வழியாக ஏழை குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முடியும்.

இந்த முறை குழந்தைகள், அந்த குறிப்பிட்ட நபர்களுக்கு இலவச அழைப்பு எண்கள் மூலமாக போன் செய்து பேசுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இவர்கள் போன் மூலம் பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குழந்தைகளுக்கு தங்களுக்கு தெரியாத விஷயத்தை ஏற்கனவே ரெக்கார்ட் செய்த போன் கால் மூலம் கேட்க முடியும்.

இல்லையென்றால் அவர்கள் தங்களுக்கு தெரியாத விஷயங்களை கேள்விகளாக கேட்டு, விளக்கம் தெரிந்து கொள்ள முடியும். இதன் ஒரே குறிக்கோள் குழந்தைகளை ஆங்கிலம் பேச வைத்து, அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துவதுதான்.

மிக மிக எளிமையான ஆங்கிலத்தை, அதை விட எளிமையாக, காசு இல்லாமல், ஜாலியாக கற்றுக்கொடுப்பதே இதன் நோக்கம். நீங்கள் ஏன் ஆங்கிலம்? என்று கேட்கலாம். ஆங்கிலம்தான் தற்போது சமுதாயத்தில் வளர்ச்சியின் முக்கிய குறியீடாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆங்கிலம் மூலம் எளிதாக வேலை கிடைக்கிறது.

நிஹார் சாந்தி பாதசாலா ஃபன்வாலா மூலம் குழந்தைகள் எளிதாக கல்வி பெற நிறைய வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. குழந்தைகள் எங்கும் எப்போதும் எளிதாக இலவசமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்பதுதான் நிஹார் சாந்தி பாதசாலா ஃபன்வாலாவின் நோக்கம் ஆகும்.

இதன் மூலம் கடந்த ஒருவருடத்தில் மட்டும் 7500+ 8.5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளும், 3 லட்சத்திற்கும் அதிகமாக தனித்துவமான குழந்தைகளும் ஆங்கிலம் கற்று இருக்கிறார்கள்.

என்எஸ்ஏ அமைப்பானது குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தொண்டு நிறுவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வறுமையில், கிராமத்தில், சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் மட்டும் கடந்த வருடம் இதன் மூலம் 2 லட்சத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகள் பலன் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Phone Uthao India Ko Padhao மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை மிக எளிதாக மாற்ற முடியும். யாரும், எப்போதும், எங்கேயும் ஆங்கிலம் பேச வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ஆகவே உங்கள் போனை எடுங்கள், ஒரு குழந்தையின் வாழ்க்கையை மாற்றுங்கள். உங்களுக்கு தேவை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் 10 நிமிடம் மட்டுமே. அதை ஒரு குழந்தைக்காக ஒதுக்குங்கள். நீங்கள் இந்த சேவையில் இணைந்து வாலண்டியராக குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X