பிகில் 'ராயப்பன்' லுக்கில் பிரபல நகைச்சுவை நடிகர்.. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்!
சென்னை: பிகில் ராயப்பன் லுக்கில் நகைச்சுவை நடிகர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மயில்சாமி.
1985 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான கன்னிராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மயில் சாமி.

முக்கிய கதாப்பாத்திரம்
இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

முறுங்கைக்காய் சிப்ஸ்
கடைசியாக மூக்குத்தி அம்மன் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார் மயில்சாமி. தற்போது முறுங்கைக்காய் சிப்ஸ் மற்றும் இடியட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சென்னை வெள்ளம்
சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக உள்ளார் நடிகர் மயில்சாமி. 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.

மயில்சாமி போட்டோ ஷூட்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட மயில்சாமி, தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் நடிகர் மயில்சாமி நடத்தியுள்ள போட்டோ ஷூட் ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் இரட்டை வேடம்
அதாவது பிகில் படத்தில் இடம்பெற்ற விஜய்யின் ராயப்பன் லுக்கில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் மயில்சாமி. கடந்த 2019ஆம் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

ராயப்பன் கேரக்டர்
மைக்கேல் என்ற மகன் கேரக்டரிலும் ராயப்பன் என்ற அப்பா கேரக்டரிலும் நடித்திருந்தார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இதில் இடம்பெற்ற ராயப்பன் கேரக்டர் பெரும் பிரபலமானது.

ரசிகர்கள் கருத்து
இந்நிலையில் ராயப்பன் லுக்கில் மயில்சாமி நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. சேரில் அமர்ந்தப்படியும், கையில் அருவாளுடனும் விதவிதமாக நின்றப்படியும் போஸ் கொடுத்துள்ளார் மயில்சாமி. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ராயப்பன் போன்றே இருக்கிறீர்கள் என கூறி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications