அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளியே வந்த பள்ளி மாணவி! பைக்கில் கடத்திய மீன்சுருட்டி ‘புள்ளிங்கோ’! அலறிய அரியலூர்!

Google Oneindia Tamil News

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே, காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி, ப்ளஸ்-2 மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற 2 பேரை, போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியை அடுத்த சொக்கலிங்கபுரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் சேகர்.

இவரது மகன் விஜி, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்று வரும் ஒரு மாணவியை, ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

”சென்னை - குமரி சாலையை 6 அல்லது 8 வழிச்சாலையாக மேம்படுத்துவது அவசியம்” அமைச்சர் எ.வ.வேலு! ”சென்னை - குமரி சாலையை 6 அல்லது 8 வழிச்சாலையாக மேம்படுத்துவது அவசியம்” அமைச்சர் எ.வ.வேலு!

காதல் - பெற்றோர் கண்டிப்பு

காதல் - பெற்றோர் கண்டிப்பு

இந்நிலையில், தனது காதலனை அந்த மாணவியிடம், விஜி நேரடியாக கூறியதால், அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து உடனடியாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். படிக்கும் வயதில் தனது மகளை காதலிப்பதாக விஷயம் தெரிந்ததை அடுத்து, மாணவியின் பெற்றோர் விஜியை கண்டித்துள்ளனர்.

ப்ளஸ்-2 மாணவி கடத்தல்

ப்ளஸ்-2 மாணவி கடத்தல்

இதனிடையே, பள்ளிக்குச் சென்று விட்டு, வழக்கமாக அந்த மாணவி வீட்டு செல்வதற்காக பள்ளிக்கு வெளியே நின்றுள்ளார். அப்போது, தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்த விஜி, மாணவியை இருச்சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், விரைந்து சென்று மீன்சுருட்டி கடை வீதியில் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து மாணவியிடம் அவரது பெற்றோர் கேட்டபோது, தன்னை வற்புறுத்தி காதலிக்க வைத்ததாக கூறியுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

16 வயதான தனது மகளை மயக்கி, வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தனது மகளை கடத்திய விஜி மீதும், அவரது நண்பர் பாலாஜி என்பவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது

போக்சோ சட்டத்தில் கைது

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி, இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர், பள்ளி மாணவியை கடத்த முயன்ற விஜியையும், அவருக்கு துணையாக இருந்த அவரது நண்பர் பாலாஜி மீதும் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இருவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ப்ளஸ் 2 மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி, இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற 2 பேரை, போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Women's police arrested 2 persons under POCSO Act who tried to kidnap a plus-2 student on a two-wheeler near Jayankondam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X