உனக்கு 15..எனக்கு 14! 10ஆம் வகுப்பிலேயே 8 மாசம் கர்ப்பம்! 9ஆம் வகுப்பு மாணவன் கைது! அலறிய அரியலூர்!

Subscribe to Oneindia Tamil

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்த செய்தியால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்குவது அதிகரித்து வருகிறது.

உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது போல் தற்போது தமிழகத்தில் இந்த கொடூரங்கள் அரங்கேறுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷாக் சம்பவம்

ஷாக் சம்பவம்

சிறுமிகளை தெரியாதவர்கள், பள்ளி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் சம்பவத்தால் வெளியே அனுப்ப பெற்றோர் தயங்கி வரும் நிலையில் பள்ளி ஆசிரியர்கள் வரிசையில் தற்போது மாணவர்களே , சிறுமிகளிடம் அத்து மீறுவதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. அந்த வகையிலான ஒரு சம்பவம் தான் தற்போது அரியலூரில் அரங்கேறி இருப்பதோடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வசிக்கும் கூலித் தொழிலாளி ஒருவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

வயிற்றில் கட்டி

வயிற்றில் கட்டி

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சிறுமியின் வயிறு சிறிது சிறிதாக பெரிதாகி வந்திருக்கிறது. வயிற்றில் ஏதோ கட்டி ஏற்பட்டதாக நினைத்து அவரது பெற்றோரும் உள்ளூரில் மந்திரிப்பது என கை வைத்தியம் செய்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து மாணவியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

எட்டு மாத கர்ப்பம்

எட்டு மாத கர்ப்பம்

சிறுமியை பரிசோதனை செய்தபோது அவர் எட்டு மாத கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர் மருத்துவர்கள். இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற சிறுமியின் பெற்றோர் இது குறித்து மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போதுதான் மாணவி தான் கர்ப்பமான பின்னணியை பெற்றோரிடம் விவரித்து இருக்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிக்கும், அந்த மாணவி படிக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்புகள் எனக் கூறி இருவரும் செல்போன்களில் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் என தங்கள் காதலை வளர்த்து வந்திருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

ஒரு கட்டத்தில் சிறப்பு வகுப்புகள் இருக்கிறது எனக் கூறி அடிக்கடி வெளியே சென்று இருக்கின்றனர். அப்போது ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமான நிலையில் தற்போது வெளியே சொன்னால் பிரச்சனையாகிவிடும் குழந்தை பிறந்த பிறகு நமக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என அந்த மாணவன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதை அடுத்து தான் கர்ப்பமான விஷயத்தை பெற்றோரிடம் மறைத்ததாகவும் தற்போது வயிற்று வலியால் மாட்டிக் கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்களை அந்த மாணவி கூறி இருக்கிறார்.

கைது

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். இதை அடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவனை திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து இருக்கின்றனர். தற்போது மாணவி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+