அரியலூர் மாணவி வழக்கு.. நீதியின் பக்கம் நின்ற மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு நன்றி.. அண்ணாமலை கருத்து
அரியலூர்: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டதை பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.
Recommended Video
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் இந்த வழக்கு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூரை சேர்ந்த அந்த மாணவி தஞ்சாவூரில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி மரணம்
மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த மத மாற்ற அழுத்தம்தான் காரணம் என்று பாஜக குற்றஞ்சாட்டியது. மாணவியின் பெற்றோரும் மத மாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாக புகார் வைத்தார். இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு மத மாற்றம் காரணம் இல்லை, மெஜிஸ்டிரேட் வாக்குமூலத்தில் மத மாற்றம் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று போலீஸ் தரப்பு வாதம் வைத்தது.

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்
இந்த வழக்கு விசாரணை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணை முடிவிற்கு வந்தது. அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவியின் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் வழக்கு தொடுத்த நிலையில் மதுரை ஹைகோர்ட் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

அண்ணாமலை
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டதை பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், அரியலூர் மாணவி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. நீதியின் பக்கம் நின்ற மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு நன்றி என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அண்ணாமலை தொடக்கத்தில் இருந்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வானதி சீனிவாசன்
இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அளித்த கருத்தில், மாணவியின் தற்கொலை வழக்கை CBIக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிக்கான போராட்டத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று பாஜகவின் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications