"நீ அழகா இருக்கே!" விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்திய மாமியார்! மருமகள் எடுத்த சோக முடிவு
பெங்களூர்: பெங்களூர் அருகே கணவரின் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தியதால், 22 வயது இளம்பெண் அஞ்சனபாய் சேகர் பாட்டீல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தில் உள்ள பால்கியைச் சேர்ந்த அஞ்சனா பாய் (22). 2022 ஆம் ஆண்டு பசவகல்யாணத்தைச் சேர்ந்த சேகர் பாட்டீல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு 11 மாத குழந்தை ஒன்று உள்ளது.

பசவகல்யாண் ஓம் காலனியில் உள்ள தனது கணவரின் வீட்டில் அஞ்சனபாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது தந்தை விஜயகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறை கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்தது. அஞ்சனபாயின் மாமியார் குடும்பத்தினர் அவரை தினமும் மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தி, குடும்ப வன்முறைக்கு ஆளாக்கியதுடன், பாலியல் தொழிலில் ஈடுபடவும் கட்டாயப்படுத்தியதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், சட்டவிரோத உறவுகளை அஞ்சனபாய் மறுத்ததற்காக அவர் தாக்கப்பட்டதாகவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் விஜயகுமார் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை, அவரது கணவர் சேகர் பாட்டீல் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மூவரும் தற்போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பால் குடிக்கும் வயதில் தாயை இழந்த குழந்தையை பார்த்து அஞ்சனா பாயின் உறவினர்கள் கலங்கி போயிருக்கிறார்கள். திருமணமான 4 ஆண்டுகளில் அஞ்சனா பாய் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுக்கத்தை பேணிக் காக்க வேண்டிய மாமியாரே, "நீ அழகாக இருக்கிறாய், எனவே விபச்சாரத்தில் செல்" என கூறுவது கொடுமையிலும் கொடுமை! கேவலத்திலும் கேவலம்! சமைக்க தெரியாததற்கெல்லாம் அஞ்சனா பாயை, மாமியார் குற்றம் குறை கூறி விபச்சாரத்திற்கு செல் என படுபாதக செயலை செய்யக் கூறி தினந்தோறும் கொடுமைப்படுத்தியதால் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அஞ்சனா பாய், தனது 11 மாத குழந்தையின் எதிர்காலம் குறித்து யோசிக்காமல் இப்படி ஒரு தவறான முடிவை எடுத்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-2464000 மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 ஐகால் உதவி எண்: 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications