அரசு கான்டிராக்ட்களில் சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு! கர்நாடக சட்டசபையில் இன்று மசோதா தாக்கல்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினருக்கும் 4% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. சிறுபான்மையினருக்கு அரசு ஒப்பந்தங்களில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கர்நாடகா மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டசபையில் இன்று ரூ1 கோடி வரையிலான கர்நாடகா மாநில அரசின் ஒப்பந்தங்களில் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினருக்கும் 4% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இந்த மசோதாவுக்கு பாஜக தலைவர்கள் எடியூரப்பா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அப்பட்டமாக, முஸ்லிம்களை திருப்திபடுத்தும் நடவடிக்கை எனவும் பாஜக, ஜேடிஎஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் அனைவருமே, முஸ்லிம்களுக்கு மட்டுமே 4% இடஒதுக்கீடு தரவில்லை; அனைத்து சிறுபான்மையினருக்கும்தான் 4% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளனர்.
ஆனாலும் இன்று அரசு ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் போது பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்குள்ளேயே போராட்டம் நடத்தக் கூடும் என்கிற சூழல் நிலவுகிறது. இதனால் கர்நாடகா சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் தங்கக் கடத்தலில் நடிகை ரன்யா ராவ் சிக்கிய விவகாரம், பெங்களூரில் ரூ75 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பிடிபட்டது உள்லிட்ட விவகாரங்களையும் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் இன்று சட்டசபையில் எழுப்பி போராட்டம் நடத்தவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications