கர்நாடகாவில் அசத்தல்.. "மாதவிடாய் கப்பிற்கு" மாறிய 8,000 கிராமப் பெண்கள்.. மாபெரும் மாற்றம்
பெங்களூரூ: கர்நாடக மாநிலத்தில் உள்ள கனகபுரா தாலுகாவின் 36 கிராமங்களை சேர்ந்த சுமார் 8,000 பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்கின்களுக்கு பதிலாக தற்போது மாதவிடாய் கப்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வளர்ந்த பெரு நகரங்களில் வசிப்பவர்களே இது குறித்த போதிய விழிப்புணர்வு பெறாத நிலையில் 36 கிராமங்களில் உள்ள பெண்கள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
மாதவிடாய் காலம் பெண்களுக்கு எப்போதும் தலைவலி நிறைந்த காலமாகும். தொடக்கக் காலத்தில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் தனியாக இருக்க வைக்கப்பட்டனர். அப்போது நாப்கின் போன்ற வசதிகள் கிடையாது. கிழிந்த துணிகளை கொண்டு தங்களை பெண்கள் தூய்மைப்படுத்தி வந்தனர். பின்னர் நாப்கின்கள் அவர்களுக்கு பேருதவியாக இருந்தது. ஆனால் நாளடைவில் இந்த நாப்கின்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின. அதாவது, நாப்கின்கள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.

மாதவிடாய்
இவற்றை தவிர்க்க தற்போது 'மாதவிடாய் கப்' பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில் பெலகு அறக்கட்டளையின் ஆதரவுடன் 'ஆசான்' எனும் நிறுவனம் ஒரு முயற்சியை முன்னெடுத்தது. ஆசான் மாதவிடாய் கப்களை தயாரிக்கும் நிறுவனமாகும். இது, கர்நாடகாவின் கனகபுரா தாலுகாவில் உள்ள பெண்களை நாப்கின்களுக்கு பதில் இந்த 'மாதவிடாய் கப்பை' பயன்படுத்த ஊக்குவித்தது.

கப்
பொதுவாக நாப்கின்களில் ஈரப்பதத்தை உறிஞ்ச கெமிக்கல் ஜெல் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, துர்நாற்றத்தை தவிர்க்க வாசனை திரவியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவை மக்கும் தன்மை கொண்டிருப்பதில்லை. எனவே இது பாதுகாப்பாக வெளியேற்றப்படாதபோது பெருகி வரும் மாசுபாட்டிற்கு மேலும் துணைபோகும் வண்ணம் அமைந்துவிடுகிறது. மட்டுமல்லாது ஒவ்வொரு முறையும் இது அதிக விலைகொடுத்து வாங்கப்படுவதால் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற நாப்கின்களையே கிராமங்களில் உள்ள பெண்கள் பயன்படுத்தி வருவதாக புள்ளிவிவரங்களும் கூறுகின்றன.

நாப்கின்
ஆனால் இந்த மாதவிடாய் கப், பயன்படுத்த எளிமையானதாகும். மீண்டும் இதை சுத்தப்படுத்தி பயன்படுத்த முடியும் என்பதால் பெரிய அளவு செலவு மிச்சப்படுத்தப்படும். இதனை பெண்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவே ஆசான் முயன்றது. இதன் பலனாக கனகபுரா தாலுகாவில் உள்ள 36 கிராமங்களின் சுமார் 8,000 பெண்கள் இந்த மாதவிடாய் கப் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். இது சூழலியல் மாறுபாட்டில் ஒரு பெரிய முன்னெடுப்பு என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த பணியை மேற்கொள்ள எடுத்த முயற்சிகள் அவ்வளவு எளிதானதல்ல என ஆசான் நிறுவனர் ஈரா குஹா கூறியுள்ளார்.

சுகாதாரம்
கிராமத்தினர் இந்த மாதவிடாய் சுகாதாரம் குறித்து மிகவும் பழைய நடைமுறைகளை பின்பற்றி வந்திருந்ததாகவும், அது அவர்களுக்கு முழுமையான சுகாதார பாதுகாப்பை வழங்காது என்பதை தெரிந்தும் அதிலிருந்து அவர்கள் வெளியே வந்திருக்கவில்லை என்றும் ஈரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கிராம பெண்கள் பழைய கந்தல் துணிகளையே சமீப நாட்களுக்கு முன்னர் வரை பயன்படுத்தி வந்ததாக கூறும் ஈரா, அப்பெண்கள் இவ்வாறு பயன்படுத்தி துணிகளை யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் எரியூட்டும் நடைமுறையை கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெலகு அறக்கட்டளை
எனவே ஆசான் மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வின் காரணமாக பெண்கள் விரைவில் இந்த மாதவிடாய் கப் பயன்பாட்டிற்கு மாறினார்கள் என்றும் ஈரா பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல பெலகு அறக்கட்டளையின் திட்ட மேலாளர் ஜோதி தெரஸ்ராஜ் இந்த முயற்சி வெற்றியடைய முக்கிய பங்காற்றியுள்ளதையும் ஈரா நினைவுகூர்ந்தார்.
இந்தியா போன்ற நீண்ட நெடிய பாரம்பரியமிக்க நாடுகளில் மாதவிடாய் நிகழ்வை ஒரு புறம் தீட்டாகவும், மறுபுறம் அசாமின் காமாக்யா கோயிலில் தெய்வத்தை சிறப்பிப்பதைப் போல கொண்டாடப்படுவதையும் காணமுடிகிறது. ஆனால் இது உடலின் ஒரு சாதாரண இயக்கம்தான். இதனை தீட்டாகவோ, கொண்டாடப்படுவதைக் காட்டிலும் அதை புரிந்துகொள்வதுதான் மனித இனத்தை மேலும் முன்னோக்கி நகர்த்த உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications