Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் அதிகாலையில் பகீர்.. 4 ஐடி ஊழியர்கள் கடத்தல்.! ரூ.19 லட்சம் கேட்டு வந்த போன் கால்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பிரபல நிறுவனத்தில் வேலை செய்த 4 பேர் ஒரே நேரத்தில் கடத்தப்பட்டனர். அவர்களைக் கடத்திய கடத்தல்காரர்கள், சுமார் ரூ.19 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம் என மிரட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகரான பெங்களூர், நாட்டின் ஐடி தலைநகரமாக அறியப்படுகிறது. பல முக்கிய ஐடி நிறுவனங்களும் பெங்களூரில் இருக்கும் சூழலில், நாடு முழுக்க இருந்து இளைஞர்கள் அங்கு வேலைக்காக வருகிறார்கள். இப்படிப் பல தரப்பட்ட மக்கள் இருப்பதால் அங்குப் பல வினோத சம்பவங்களும் நடக்கும். சில அதிர்ச்சி குற்றங்களும் நடக்கும். அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது.

Bangalore BPO Staffs Kidnapped in Koramangala Police has 8 Arrested After Rs 19 Lakh Ransom Demand

இரவோடு இரவாகக் கடத்தல்

பெங்களூரில் உள்ள கோரமங்களா பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நான்கு உயர் அதிகாரிகள் சனிக்கிழமை காலை கடத்தப்பட்டனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் துரிதமாகச் செயல்பட்ட போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய எட்டு பேரைக் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு டொயோட்டா இன்னோவா மற்றும் மாருதி சுசுகி வேகன் ஆர் கார்களையும் பறிமுதல் செய்தனர்.

மிரட்டல்

பெங்களூரில் உள்ள பிரபல பிபிஓ நிறுவனத்தில் தான் கடத்தப்பட்ட இந்த நான்கு ஊழியர்களும் பணிபுரிந்து வந்தனர். சனிக்கிழமை 1.30am அளவில் கடத்தியுள்ளனர். அவர்கள் 4 பேருமே அங்கு மேனேஜர் லெவலில் இருப்பவர்கள். தங்களை அரசு அதிகாரிகள் போலக் காட்டி கொண்ட கடத்தல்காரர்கள், விசாரணை என்ற போர்வையில் 4 பேரையும் கடத்தியுள்ளனர்.

இது தொடர்பாகத் தென்கிழக்கு பெங்களூர் துணை காவல் ஆணையர் சாரா ஃபாத்திமா கூறுகையில், "அவர்கள் வேலை செய்து வந்த அலுவலகத்திற்கு அருகிலேயே கடத்தல்காரர்கள் காத்திருந்தனர். 4 பேரையும் கீழே வரவழைத்து, அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்" என்று கூறினார்.

போலீசாருக்கு தகவல்

1.3am அளவில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து 4 மணியளவில் கடத்தப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், சில வங்கிக் கணக்குகளைக் கொடுத்து.. அந்த கணக்கிற்குப் பணத்தை மாற்றும்படி கூறியிருக்கிறார்.. பாதி தொகையை இப்படி வங்கிக் கணக்கிற்கும், மீதி தொகையை ரொக்கமாகத் தர வேண்டும் எனச் சொல்லியும் மிரட்டியுள்ளனர். இதனால் பதறிய உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தூக்கிய போலீஸ்

சாரா ஃபாத்திமா மேலும் கூறுகையில், "இது தொடர்பாக அதிகாலையில் உதவி மையத்திற்குக் கால் வந்தது. உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்புக் குழுக்களை அமைத்தோம். கடத்தல்காரர்களைக் கண்டுபிடித்து, அவர்களைக் கைது செய்தோம். மேலும், கடத்தல் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தோம்" என்று டிசிபி கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அவர்கள் எதற்காகக் கடத்தலில் ஈடுபட்டனர்.. அவர்களுக்கு பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+