‛ரம்ஜான் உணவு திருவிழாவுக்கு தடை போடுங்க’.. பெங்களூர் தமிழ் ஏரியாவில் திடீர் போர்க்கொடி! பரபரப்பு
பெங்களூர்: பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பிரேசர் டவுனில் ஆண்டுதோறும் ‛ரம்ஜான் உணவு திருவிழா' நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ‛ரம்ஜான் உணவு திருவிழா' நடத்த கூடாது எனக்கூறி அந்த பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் கணிசமாக தமிழர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக சிவாஜி நகர், அல்சூர், பிரேசர் டவுன், கலாசிபாளையம், சாம்ராஜ்பேட்டை, கேபி அக்ரஹாரம், காந்தி நகர், ஸ்ரீராமபுரம் உள்பட பல இடங்களில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். பரந்து விரிந்த பெங்களூரில் இந்த பகுதிகளுக்கு சென்றால் குட்டி தமிழ் கிராமம் போன்ற உணர்வு ஏற்படலாம்.

பெங்களூர் மக்கள்தொகை என்பது தற்போது 1 கோடியை கடந்துள்ள நிலையில் தமிழர்களின் எண்ணிக்கை எப்படி பார்த்தாலும் 20 லட்சத்தை தாண்டலாம் என கூறப்படுகிறது. இதில் பிரேசர் டவுன் என்பது முக்கியமான பகுதியாகும். இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
இந்த பிரேசர் டவுனில் உள்ள எம்எம் ரோடு, மசூதி ரோடு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் ஆண்டுதோறும் ‛ரம்ஜான் உணவு திருவிழா' என்பது வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின்போது ரம்ஜான் கால வெவ்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் விற்பனை செய்யப்படும். இந்த உணவு திருவிழாவில் பெங்களூரில் வசிக்கும் மக்கள் அதிகமானவர்கள் பங்கேற்று வித்தியாசமான உணவு பதார்த்தங்களை சுவைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது பிரேசர் டவுனில் ரம்ஜான் உணவு திருவிழா நடத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதாவது பிரேசர் டவுன் மக்கள் நலவாழ்வு சங்கத்தின் உறுப்பினர்கள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு ரம்ஜான் உணவு திருவிழா பிரேசர் டவுனில் அடுத்த மாதம் (மார்ச்) 12ம் தேதி தொடங்கலாம் என கூறப்படும் நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் புலிகேசிநகர் எம்எல்ஏ ஏசி சீனிவாசாவிடம் மனு வழங்கி உள்ளனர். இந்த மனுவில் மொத்தம் 3,500 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த மனுவில் ‛‛மார்ச் 12ம் தேதி பிரேசர் டவுனில் தொடங்கும் ரம்ஜான் உணவு திருவிழாவை தடை செய்ய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உணவு திருவிழாவை ஏன் தடை செய்ய வேண்டும் என்று பிரேசர் டவுன் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் விளக்கி உள்ளனர். இதுபற்றி அந்த சங்கத்தை சேர்ந்த சவுத் தஸ்தாகீர் கூறுகையில், ‛‛கடந்த ஆண்டே இந்த உணவு திருவிழாவை நிறுத்த வேண்டும் என்ற பிரசாரத்தை தொடங்கினோம். ஆனால் நடக்கவில்லை.
இதனால் வரும் ரம்ஜானுக்கு முன்பு இந்த ஆண்டில் நடவடிக்கை என்பது தேவையாக உள்ளது. ஏனென்றால் இந்த உணவு திருவிழாவால் நல்லது நடப்பதை விட தீமை தான் கிடைக்கிறது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் உணவு திருவிழாவில் ஏரியா மாசுபடுகிறது. சுகாதாரமற்ற உணவு தயாரிப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கடந்த ஆண்டு சிலிண்டர் வெடித்தது. மேலும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உருவாகியும் கூட இன்னும் நடவடிக்கை என்பது எடுக்கப்படவில்லை'' என்றார்.
இதுபற்றி சங்கத்தின் இணை செயலாளர் தவ்லத் ராவ் கூறுகையில், ‛‛கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக பிரேசர் டவுன் மக்கள் ரம்ஜான் உணவு திருவிழாவுக்கு எதிராக குரல் கொடுத்த வருகின்றனர். இந்த திருவிழாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை என்பது ஏற்கப்படாமலேயே உள்ளது'' என்றார். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications