பெங்களூரில் ஓடிப்போன 2வது மனைவி, 26 வயது பெண்ணுடன் 52 வயது காதலன்.. கடைசியில் அவருமே.. வந்த கோபம்
பெங்களூர்: பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா மல்லனசந்திரா கிராமத்தை சேர்ந்த 52 வயதாகும் விட்டல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். முதல் மனைவி உயிருடன் இல்லை.. இரண்டாவது மனைவி வேறு ஒருவரை காதலித்துள்ளார். அவருடன் ஓடிப்போய்விட்டார். இதையடுத்து திருமணம் செய்யாமல் 26 வயது இளம்பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் அந்த காதலியும் வேறு ஒருவரை காதலித்ததை அறிந்த விட்டல் ஆத்திரம் அடைந்தார். தொடர்ந்து அவர் எடுத்த முடிவு அதிர வைத்துள்ளது.
திருமணத்தை மீறிய உறவும் சரி, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதும் சரி, சட்ட ரீதியாக பாதுகாப்பு கிடையாது. கள்ளக்காதலில் ஈடுபடும் கணவன் அல்லது மனைவி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதேநேரம் அவரிடம் இருந்து விவாகரத்து பெற மட்டுமே வழிகள் உள்ளது. இதை காரணம் காட்டி விவாகரத்து பெறலாம்.. அவ்வளவு தான்..

சட்ட பாதுகாப்பு கள்ளக்காதலுக்கு இல்லை
அதேபோல் திருமணம் ஆனவரை இரண்டாவதாக திருமணம் செய்தால், ஏற்கனவே அவர் திருமணம் ஆனவர் என்பது தெரிந்தும் திருமணம் செய்தால், அதற்கும் பாதுகாப்பு கிடையாது. ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் திருமணம் செய்தால் அல்லது அவருடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு, அவர் ஏமாற்றியதாக புகார் அளித்தாலும் நிற்காது. இதன் காரணமாக எளிதாக கள்ளக்காதலில் ஈடுபடுவோர் சேர்ந்து வாழ்வது அடிக்கடி நடக்கிறது. இன்னொரு புறம் கள்ளக்காதல் விவகாரம் சமூகத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பெங்களூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
காதலனுடன் ஓடிய இரண்டாவது மனைவி
கர்நாடகா மாநிலம் பெங்களூர் அருகே ஆனேக்கல் தாலுகா மல்லனசந்திரா கிராமத்தை சேர்ந்த 52 வயதாகும் விட்டல் என்பர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். முதல் மனைவி உயிரிழந்த பின்பு 2-வது ஒரு பெண்ணை விட்டல் திருமணம் செய்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு வேறொருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் விட்டலுடன் வாழ பிடிக்காமல், அந்த பெண், புதிய காதலனுடன் ஓடிப்போய்விட்டார்.
26 வயது பெண்ணுடன் காதல்
இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மல்லனசந்திராவை சேர்ந்த 26 வயதாகும் வனஜாக்ஷி என்ற இளம் பெண்ணுடன் விட்டலுக்கு பழக்கம் ஏற்பட்டது. வனஜாக்ஷிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது கணவர் இறந்து விட்டார். இதனால் விட்டல், வனஜாக்ஷி இடையே இருந்த பழக்கம் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் திருமணம் செய்யாமலேயே மல்லனசந்திரா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ரீல்ஸ் மோகம்
வனஜாக்ஷி ரீல்ஸ் மோகம் கொண்டு. அடிக்கடி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். 52 வயதாகும் தனது காதலன் விட்டலுடன் சேர்ந்து சில வீடியோக்களை வனஜாக்ஷி வெளியிட்டபடி இருந்துள்ளார். இதற்கிடையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி பன்னரகட்டாவில் இருந்து பசவனபுராவை நோக்கி ஒரு நபருடன் வனஜாக்ஷி காரில் சென்றாராம். இதுபற்றிய தகவல் விட்டலுக்கு கிடைத்தது.
காரில் சென்ற வனஜாக்ஷி
உடனே வனஜாக்ஷி சென்ற காரை தன்னுடைய காரில் அவர் பின்தொடர்ந்து சென்றுள்ளாராம். உளிமாவு அருகே கொம்மதேவனஹள்ளி பகுதியில் வனஜாக்ஷி சென்ற காரை, விட்டல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.. பின்னர் அந்த நபருடன் எதற்காக செல்கிறாய்? என்று கேட்டு வனஜாக்சியுடன் விட்டல் சண்டை போட்டாராம். அவர்களுக்குள் வாக்குவாதமும் உண்டானது.
பெட்ரோல் ஊற்றினார்
உடனே ஆத்திரமடைந்த விட்டல், கண் இமைக்கும் நேரத்தில் தன்னுடைய காரில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து, வனஜாக்ஷி இருந்த கார் மீது ஊற்றி தீவைக்க முயன்றார். உடனே வனஜாக்ஷியும், அவரது நண்பரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். ஆனாலும் அவர்களை விடாமல் விட்டல் விரட்டி சென்றார். பின்னர் வனஜாக்ஷியை மடக்கி பிடித்த விட்டல், நடுரோட்டில் வைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றினார். மேலும் சிகரெட் புகைக்க பயன்படுத்தும் லைட்டர் மூலமாக வனஜாக்ஷி உடலில் அவர் தீவைத்தார்.
நடுரோட்டில் சம்பவம்
இதனால் அவர் நடுரோட்டில் உடலில் தீப்பிடித்து உயிருக்கு போராடினார். பின்னர் அங்கிருந்து விட்டல் காரை எடுத்து சென்று விட்டார். வனஜாக்ஷி உடலில் பிடித்த தீயை, அவரது நண்பர் உள்பட அங்கிருந்தவர்கள் அணைத்தார்கள். பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய வனஜாக்ஷி பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வனஜாக்ஷி காதலன் கைது
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் 60 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டு இருந்ததால், சிகிச்சை பலனின்றி வனஜாக்ஷி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து உளிமாவு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட விட்டலை தேடினார்கள். இந்த நிலையில், விட்டலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போது தான் கள்ளக்காதல் விவகாரங்கள் போலீசாருக்கு தெரியவந்துள்ளன. இந்த சம்பவம் பெங்களூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications