உங்களுக்கு கொரோனா நெகட்டிவ்.. வரிசையாக வந்த 16 எஸ்எம்எஸ்.. திறந்து பார்த்தால்.. அதிர்ந்த வாலிபர்
பெங்களூர்: கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாத ஒருவருக்கு, அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் நெகட்டிவ் என்று வந்துள்ளதாக 16 எஸ்எம்எஸ்கள் தொடர்ந்து வந்துள்ளது. இது மிகப்பெரிய முறைகேடு நடக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
பெங்களூர் நகரை சேர்ந்தவர் சஜய். 39 வயதாகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அவர் வெளியூர் செல்வதற்காக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அதுவும் கூட வேறு ஒரு நம்பரில் இருந்து தான் பதிவு செய்தார். மெசேஜ் வருவதாக இருந்தால் அப்போதே வர வேண்டும், அல்லது அந்த நம்பருக்கு வர வேண்டும்.

16 மெசேஜ்கள்
இந்த நிலையில் யாருக்கும் வெளியே பெரிய அளவுக்கு தெரியாத தனது இன்னொரு செல்போன் எண்ணுக்கு கடந்த சனிக்கிழமை முதல் அடுத்தடுத்து 16 மெசேஜ்கள் வந்தன. இவை அனைத்தும் உங்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்று கூறி வந்த மெசேஜ்கள். ஆனால், பெண்கள், ஆண்கள் பலதரப்பட்ட வயது உடையவர்கள் என பல்வேறு தகவல்களுடன் இந்த மெசேஜ் வந்துள்ளது. சஜய் என்ற பெயர் இல்லை.

முறைகேடு புகார்
இதையடுத்து ட்விட்டர் மூலமாக பெங்களூர் மாநகராட்சிக்கு இந்த கவனத்திற்கு கொண்டு சென்றார் சஜய். இவ்வாறு வெளியே தெரியாத நம்பருக்கு மெசேஜ் வருவது ஏதோ முறைகேடு நடப்பதன் காரணமாக இருக்கக்கூடும் என்று அவர் சந்தேகம் வெளிப்படுத்தினார்.

பிற நகரங்கள்
இதையடுத்து மாநகராட்சி விசாரணை நடத்தியபோது அதில் சில பரிசோதனைக்கு உட்பட்ட நபர்கள் மைசூர், ஹூப்ளி போன்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள். சிலர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. ஆனால் இவரது நம்பருக்கு அவர்கள் குறித்த தகவல் வந்தது ஏன் என்பதுதான் புரியவில்லை.

பேன்சி நம்பர்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் இவ்வாறு வந்திருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கடைசி நம்பர்கள் 0000 அதாவது பொதுவாக ஃபேன்சி நம்பர் என்றால் இது போல தவறான மெசேஜ்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார்கள். இருப்பினும் இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட நபரின் கோரிக்கையாக இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications