பெய்த பேய் மழை.. சுரங்கப்பாதையில் மூழ்கிய கார்! இளம் பெண் பரிதாபமாக மரணம்! பெங்களூரில் ஷாக் சம்பவம்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், தேங்கிய நீரில் கார் மூழ்க்கயதில் ஐடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் இன்று கடுமையாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே பெங்களூரில் பல முக்கிய இடங்களிலும் தொடர்ச்சியாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தொடர்ச்சியாகக் கொட்டி வரும் மழை காரணமாகப் பெங்களூர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.. கடும் மழை காரணமாகப் பெங்களூரில் சாலைகள் தொடங்கிப் பல இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது.

ஷாக் சம்பவம்: இதனிடையே கடும் மழையால் தேங்கிய நீரில் மூழ்கி பெங்களூரில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெங்களூருவில் பெய்த இந்த கனமழையால், கே.ஆர். சர்க்கிள் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அங்கே காரில் பயணித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண் 22 வயதான பானுரேகா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காரில் இருந்து மேலும் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவின் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர் தங்கள் விடுமுறை கொண்டாடப் பெங்களூரு வந்துள்ளனர். இருப்பினும், இந்த விடுமுறை கொண்டாட்டமே எமனாக மாறிவிட்டது. அவர்கள் காரில் பெங்களூரை சுற்றிக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் கார் விதான சவுதாவிலிருந்து சென்றுள்ளனர். அப்போது கார் ஆர்கே சர்க்கிள் சுரங்கத்தில் சென்றுள்ளது.
அங்கே நீர் அதிகப்படியாகத் தேங்கியிருந்த நிலையில், கார் அதில் எதிர்பாராத விதமாக மூழ்கியது. இந்தச் சம்பவத்தில் 22 வயதான பானுரேகா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பெங்களூருவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த மீட்பு படையினர் நீரில் மூழ்கிய காரை மீட்டனர்.
சித்தராமையா: காரில் இருந்து மீட்கப்பட்ட மற்ற குடும்ப உறுப்பினர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அங்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட முதல்வர் சித்தராமையா, மருத்துவமனைக்கும் நேரில் சென்று சிகிச்சை பெற்று வருவோர் குறித்துக் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய சித்தாரமையா, "காரில் டிரைவர் உட்பட 7 பேர் இருந்துள்ளனர். அவர்கள் பெங்களூரை சுற்றிப்பார்க்க வாகனத்தை வாடகைக்கு எடுத்திருந்துள்ளனர். அந்த சுரங்கப் பாதைக்குச் செல்ல வேண்டாம் என்பதைக் காட்டும் வகையில் அருகே தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பலத்த காற்று மற்றும் மழை காரணமாக அவை கீழே விழுந்தன. டிரைவர் அங்கே சென்றிருக்கக்கூடாது.
அங்கு கார் சென்றபோது கண்ணாடியை உடைத்துக் கொண்டு தண்ணீர் காருக்கு உள்ளே புகுந்ததுள்ளது. கதவுகளை அவர்களால் உடனடியாக திறக்க முடியவில்லை எனத் தெரிகிறது. பானுரேகா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்துவிட்டார்" என்று அவர் தெரிவித்தார்.

இழப்பீடு: பானுரேகாவின் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்த அவர், காரில் சிக்கிய மற்றவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.
மருத்துவமனையில் பானுரேகாவுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதே அவர் உயிரிழக்கக் காரணம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இது குறித்துப் பதிலளித்த முதல்வர் சித்தராமையா, "சிகிச்சையில் வ்வித தாமதமும் இல்லை. இருப்பினும், இப்படியொரு புகார் வந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்றார்.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
அடுத்த 3 மணி நேரம்.. விடாமல் கொட்டப் போகுது மழை.. செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களுக்கு அலர்ட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications