பெங்களூரில் இப்படியொரு பெண்ணா? முனுசாமிக்கு இது தேவையா? ஷில்பா சொன்னதுமே ஆடிப்போன பெங்களூரு போலீஸ்
பெங்களூரு: கடந்த 2 நாட்களாக கர்நாடகா மாநிலமே அதிர்ந்து கிடக்கிறது.. யாரிந்த தம்பதி? ஹசன் மாவட்டத்தில் உயிரிழந்த நபர் என்ற விசாரணையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
கா்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சோ்ந்தவர்கள் இந்த தம்பதி.. பெங்களூரு புறநகா் ஒசக்கோட்டையில் வசித்து வருகிறார்கள் முனிசாமி கவுடாவும், ஷில்பாராணியும்.

முனிசாமி கவுடா அதே பகுதியில், டயா் விற்பனை கடையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்... ஆனால் வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்பதால், நிறைய இடங்களில் லட்சக்கணக்கில் கடன்களை பெற்றுள்ளார். எனினும், அந்த கடன்களுக்கு வட்டியும் தரவில்லை, அசலும் தரவில்லை.. கடன் கொடுத்தவர்களும் நெருக்க தொடங்கிவிட்டார்கள்.
தம்பதி: இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தம்பதியினர் விழித்துள்ளனர்.. இறுதியில், தன்னுடைய பெயரிலுள்ள காப்பீட்டு தொகையை பெற்று கொள்வதற்கு முடிவு செய்தார் முனுசாமி.. இதற்காக தம்பதி இருவருமே கூட்டாக சேர்ந்து பலே பிளானில் இறங்கினார்கள்.
அதன்படி, தன்னைப்போலவே தோற்றம் கொண்ட நபரை தேடினார் முனிசாமி.. சில நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு அச்சுஅசல் முனுசாமி மாதிரியே ஒருவர் சிக்கினார்..
கொல்லஹள்ளி: அந்த நபரிடம், வலிய சென்ற இந்த தம்பதியினர் நட்பாக பழகினர்.. ஒருநாள் தங்கள் காரில் அழைத்து கடத்திய இந்த தம்பதி, ஹாசன் மாவட்டம் அரசிகெரே அருகே கொல்லஹள்ளி கேட் பகுதியில், அந்த நபரை கொலை செய்து, சடலத்தை அங்கேயே வீசிவிட்டார்கள்.. இதனிடையே, கேட் பகுதியில், சடலம் கிடப்பதாக ஹாசன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு, இறந்தவர் யார் என்ற விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், ஷில்பா ராணி பதறியடித்து கொண்டு ஹசன் போலீசாரிடம் சென்றார். இறந்தவர் தன்னுடைய கணவர் என்று சொல்லி, சடலத்தை வாங்கி உள்ளார். பிறகு குடும்பத்தினா் முன்னிலையிலேயே இறுதிச்சடங்கையும் நடத்தியிருக்கிறார்.. பிறகு உடலையும் அடக்கம் செய்துவிட்டார்.. ஆனாலும், ஷில்பாராணியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விசாரணை: அதனால், ஷில்பாவை ரகசியமாக கண்காணிக்க துவங்கினர்.. அவரது நடவடிக்கையில் மேலும் சந்தேகம் வலுத்ததால், ஷில்பாவிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.. அப்போதுதான், அனைத்து தகவல்களையும் ஒன்றுவிடாமல் போலீசாரிடம் சொன்னார் ஷில்பா.
கடன் தொல்லை அதிகமாகிவிட்டதால், தன்னுடைய கணவரை போலவே தோற்றம் கொண்ட அப்பாவி ஒருவரை, தேடிப்பிடித்து கொன்றதாகவும், தன்னுடைய கணவர் முனிசாமியை, எங்காவது தலைமறைவாக வாழும்படி அறிவுரை சொல்லி அனுப்பி வைத்துவிட்டதாகவும், காப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் ஷில்பா சொன்னார்.
முனுசாமி: இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் முனுசாமியை தேட ஆரம்பித்தனர். ஆனால், முனிசாமியோ, தலைமறைவாக மறைந்து வாழாமல், வெளியூரில் ஹாயாக சுற்றித்திரிந்துள்ளார்...
அதுமட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த ஊரான ஒசக்கோட்டையில் என்ன நடக்கிறது என தெரியாமல், முனிசாமியே நேரடியாக கிளம்பி வந்துள்ளார்.. ஏற்கனவே தேடிக்கொண்டிருந்த போலீசாரிடம், வலிய வந்து சிக்கிக் கொண்டார் முனுசாமி.. இதையடுத்து, முனுசாமியை சுற்றிவளைத்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். காப்பீட்டு தொகையை பெறுவதற்காக உயிரிழந்ததாக நாடகமாடியதை முனுசாமியும் ஒப்புக் கொண்டார்.
யார் அவர்: இதையடுத்து முனிசாமி, ஷில்பா, இந்த கொலைக்கு உதவியாக இருந்த லாரி டிரைவா் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனா். காப்பீட்டு தொகையை பெற வேண்டும் என்பதற்காக, சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒரு நபரை கொடூரமாக கொன்றுள்ளனர் இந்த பெங்களூர் தம்பதி.. ஆனால், அந்த அப்பாவி யார் என்றே கடைசிவரை தெரியவில்லை..!!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications