"ஏன் லேட்.." கேள்வி கேட்டதால் இளம்பெண் வீட்டில் சிறுநீர் பாட்டிலை கொட்டி அத்துமீறிய டெலிவரி ஏஜெண்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: டெலிவரி தாமதமானது குறித்து கேள்வி கேட்ட பெண்ணை ரேபிடோ டெலிவரி ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரது வீட்டின் கேட்டை தட்டி, கதவை திறக்க முயன்றுள்ளார். மேலும், வீட்டின் வாசலிலும் சிறுநீர் ஊற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக வீடியோ ஆதாரத்தோடு பெண் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த காலத்தில் டெலிவரி என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பெரும்பாலான டெலிவரி ஊழியர்கள் மிகுந்த கன்னியத்துடேனே்யே நடந்து கொள்கிறார்கள். இருப்பினும், மிக மோசமாகவும் அத்துமீறியும் நடந்து கொள்ளும் சில டெலிவரி பார்டனர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Bangalore Woman Rapido

கர்நாடக பெண்

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சிரிஷா என்ற பெண், இந்த சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் தளத்தில் விரிவான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரேபிட்டோ டெலிவரி பார்ட்னர் ஒருவர் தனது வீட்டிற்கு வருவதற்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தான் கேள்வி எழுப்பியபோது, அந்த நபர் தன்னை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக சிரிஷா குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு நில்லாமல்.. அந்த நபர் வீட்டின் கேட்டை பலமாக தட்டியதுடன், தனது கையை ஸ்டீல் கேட்டிற்கு உள்ளே விட்டு கதவை திறக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக தான் கேட்டை பூட்டியதாகவும், இல்லையெனில் நிலைமை மேலும் மோசமாகியிருக்கலாம் என்றும் சிரிஷா கூறியுள்ளார்.

சிறுநீர்

இந்த சம்பவம் தொடர்பாக சிரிஷா வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகளும் தற்போது கவனம் பெற்றுள்ளன. அந்த காட்சிகளில் ரேபிட்டோ டெலிவரி ஊழியர் நபர், ஒரு பாட்டிலில் இருந்த திரவத்தை வீட்டின் வாசல் பகுதியில் ஊற்றிவிட்டு அங்கிருந்து வேகமாக செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதாவது பாட்டிலில் சிறுநீரை பிடித்து கொண்டு வந்து ஊற்றி இருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்தபோது தான் வீட்டில் தனியாக இருந்ததாகவும் சிரிஷா தெரிவித்துள்ளார். திடீரென ஒருவர் வீட்டின் கேட்டை தட்டி, கேட்டை திறக்க முயன்றதுடன், பின்னர் வீட்டின் வாசலில் சிறுநீர் ஊற்றிவிட்டு சென்றது தனக்கு மிகுந்த அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். மேலும், சம்பவத்திற்கு பிறகு அந்த டெலிவரி ஊழியர் வாட்ஸ்அப்பில் தனக்கு ஆடியோ நோட் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ள சிரிஷா, அதையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குற்றச்சாட்டு

அதில் அந்த நபர் தன்னை அவமதிக்கும் வகையிலும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசியதாக சிரிஷா குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக மிகவும் மோசமான அறிவுறுக்கத்தக்க வார்த்தைகளால் தன்னை மீண்டும் மீண்டும் அழைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக ரேபிட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ள முயன்று வருவதாகவும் சிரிஷா கூறியுள்ளார். ஆனால் தனக்கு முறையான தீர்வு வரவில்லை எனவும் மாறாக ஏற்கனவே பல டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளீர்கள் என்பதே பதிலாக வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நடவடிக்கை தேவை

ஒரே புகாரை எடுத்து கொண்டு, சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என சிரிஷா தெரிவித்துள்ளார். பல்வேறு புகார் டிக்கெட்டுகளை பதிவு செய்திருப்பதாக கூறி பிரச்சினையை முடித்துவிடாமல், இதை முறையாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த கொடூரம் தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள போஸ்ட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணும் தனது போஸ்ட்டை டெலிட் செய்துவிட்டு பெங்களூர் போலீசாருக்கு நன்றி தெரிவித்து போஸ்ட்டை பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+