சிக்கலில் பெங்களூர்! ஐடி வளர்ச்சியும்.. உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பும்! எப்போது நிறைவேறும் கனவு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர், சர்வதேச அளவில் ஐடி துறைக்கு நிகராக வளர்ச்சி பெற்றிருக்கிறது. சிக்கல் என்னவெனில்.. இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு இன்னமும் வேலை வாய்ப்பு என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்பதுதான். இந்த முரண்பாடுகள் எப்போது சரி செய்யப்படும்? என்று கன்னட மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

கர்நாடக ரக்ஷண வேதிக போன்ற கன்னட அமைப்புகளை சேர்ந்த ஆர்வலர்கள், பெங்களூரில் உள்ள கூகுள் போன்ற முக்கிய ஐடி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Bengaluru IT

இந்த ஆய்வுகளின் நோக்கம், அந்த கம்பெனிகளில் வேலை பார்க்கும் மொத்த ஊழியர்கள் எவ்வளவு ?அதில் எத்தனை சதவீதம் பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்? என்பது தான். இது மட்டும் இல்லாமல்.. கடந்த 3 ஆண்டுகளில் நடந்த ஆட்சேர்ப்புகளில் கன்னடர்களின் விகிதம் எத்தனை? என்பதையும் இவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தகுதியான உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தான் இவர்களுடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும் என இந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இப்படி நிறுவனங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கியதால்.. அந்நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தன. அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை நிறுவனங்கள் கொண்டு வந்தன. விஷயம் சீரியஸாவதை உணர்ந்த கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார், கன்னட அமைப்புகள் இதுபோன்று ஐடி நிறுவனங்களில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தக்கூடாது என்றும்.. சட்ட வரம்புக்குள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அதே நேரம், ஐடி நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.

மறுபுறம் தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றே உள்ளூர் கன்னட மக்களை புறக்கணிப்பது தெரிய வந்தால்.. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்த பிரச்சனைகள் எல்லாம் இன்று நேற்று தொடங்கியது கிடையாது. கடந்த 1983 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. அப்போதைய முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரோஜினி மஹிஷி தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அந்த குழு 1986ல் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் மாநில அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிறுவனங்களில் கன்னட மக்களுக்கு 100% வேலை வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளிலும் 65 முதல் 80 சதவீதம் வரை கன்னட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிக்கை இப்போது வரை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

எனவே கன்னட மக்கள், தங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். கடந்த 2024 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் சித்தராமையா, இது குறித்து ஒரு முக்கிய மசோதாவை கொண்டு வந்திருந்தார். அதாவது, தனியார் துறைகளில் மேலாண்மை பதவிகளில் 50% அளவுக்கும், இதர பதவிகளில் 70 முதல் 75 சதவீதம் அளவுக்கும் கன்னட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று அந்த மசோதா கூறி இருந்தது.

இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் ஒப்புதலும் அளித்தார். ஆனால், ஒப்புதல் கொடுத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே.. ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. இப்படி எல்லாம் செய்தால் தங்களுடைய வணிக செயல்பாடுகள் மற்றும் முதலீடுகள் பாதிக்கும் என்று அந்நிறுவனங்கள் கூறின. கடைசியாக வேறு வழியின்றி சித்தராமையா இந்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று.

இருப்பினும் 2023 சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் கன்னட மக்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கன்னட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தான் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் அந்த அமைப்புகள் நேரில் சென்று ஆய்வை மேற்கொண்டிருக்கின்றன.

ஒருபுறம், கன்னட அமைப்புகள் ஆய்வு நடத்த.. மறுபுறம் அரசு தடை போட.. கடைசி வரை கன்னட மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கனவாகவே போய்விடுமோ என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+