உனக்கு மன்னிப்பே கிடையாது.. நிச்சயிக்கப்பட்ட நபரை கொன்ற பெங்களூர் சுபாவின் கருணை மனு நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? 20 வயது நிரம்பிய சட்டக்கல்லூரி மாணவியின் மனதில் எழுந்த அந்த ஒரு கேள்வி.. காதல் திருமணம் தான்.. காதலனை தான் கரம்பிடிப்பேன் என முடிவெடுத்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞரை திட்டம்போட்டு காதலன் உதவியுடன் கொன்ற 'பெங்களூர் ரிங்ரோடு சுபா' வழக்கு மீண்டும் பரபரப்பாாகி உள்ளது.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சுபா மற்றும் அவரது காதலன் அருண் வர்மா ஆகியோரின் கருணை மனுக்களை கர்நாடகா அமைச்சவை நேற்று நிராகரித்துள்ளது. 2003ல் இருந்தே சிறைவாசம் அனுபவிக்கும் இருவரின் கருணை மனு நிராகரிப்பின் பின்னணியில் அந்த கொலையின் கொடூரம் உள்ளது.

karnataka-cabinet-rejects-mercy-pleas-from-subha-shankaranarayanan-who-killed-her-fiance-with-lover

வயது 27.. சாப்ட்வேர் துறையில் வேலை.. கைநிறைய சம்பளம்.. கண்ணியமான குடும்ப பின்னணி.. மனதுக்கு பிடித்த பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம்.. இன்னும் சில வாரங்களில் திருமணம் என்று இளமை துள்ள இல்லற வாழ்க்கையை நோக்கி நாட்களை நகர்த்தியவர் கிரீஷ்.

இவரது ஜோடியின் பெயர் சுபா சங்கரநாராயணன்.. வயது 20 தான்.. சட்டக்கல்லூரியில் 5வது செமஸ்டர் படித்து வந்தார். சுபா - கிரீஷின் பெற்றோர்கள் நல்ல நண்பர்கள். இந்த நட்பை ஏன் சம்பந்தியாக மாற்றக்கூடாது என்று நினைத்தது தான் இருவரின் நிச்சயதார்த்தத்திற்கும் முக்கிய காரணம்.

பெங்களூரில் வசித்த இந்த சுபா - கிரீஷின் நிச்சயதார்த்தம் 2003 நவம்பர் 30ம் தேதி விமரிசையாக நடந்தது. கிரீசுக்கு, சுபா மீது கொள்ளைப்பிரியம். அவர் தான் உலகம் என்று மாறினார். அடிக்கடி செல்போனில் பேசுவது என்று தனது காதலை சுபா மீது வெளிப்படுத்தி வந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த 3வது நாளில் கிரீசுக்கு ஒரு ஆசை. தனது வருங்கால மனைவிக்கு திருமணத்துக்கு முன்பே மறக்கமுடியாத நினைவை பரிசளிக்க விரும்பினார். நல்ல டின்னர் வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து வெளியே அழைத்து சென்றார்.

இருவரும் பெங்களூர் ரிங் ரோட்டில் உள்ள ரெஸ்டாரண்ட்டில் டின்னர் முடித்தனர். பிரிய மனம் இன்றியும் கூட வீட்டுக்கு கிளம்பலாமா? என்று கிரீஷ் கேட்க.. ''வேண்டாம்.. இன்னும் கொஞ்சம் நேரம் நாம சேர்ந்து நேரம் செலவிடலாம். ரிங் ரோட்டில் உள்ள விமானம் பார்க்கும் இடத்துக்கு செல்லலாம். அங்கு விமானங்கள் தாழ்வாக பறக்கும். இரவில் பார்க்க சூப்பரா இருக்கும்? போலாமா'' என்று கூறினார்.

சுபா கூறிய இந்த இடம் என்பது பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தின் அருகே அமைந்துள்ளது. இந்த இடத்தில் இருந்து பார்க்கும்போது விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதும், விமான நிலையத்தில் இருந்து வானில் பறப்பதையும் அருகே நின்று ரசிக்கலாம். சுபா மீது காதல் முற்றி இருந்த கிரீஷ் அவரது கோரிக்கையை மறுக்கவே இல்லை. உடனே தலை அசைத்தார்.

இருவரும் பெங்களூர் ரிங் ரோட்டிற்கு சென்றனர். கைகளை கோர்த்தபடி சேர்ந்து நின்று விமானங்கள் பறப்பதை இருவரும் ரசித்தனர். அப்போது தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. விமானங்கள் சர்சர்வென மேகத்தை கிழித்து கொண்டு வானில் பறப்பதையும், வானில் இருந்து தரையை முட்டுவது போல் வந்து விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதையும் ரசித்து கொண்டிருந்த கிரீஷ்க்கு தெரியாது அது தான் கடைசி ராத்திரி என்று..

ஆம் கிரீஷின் தலைக்கு மேல் விமானங்கள் மட்டும் பறக்கவில்லை.. மரணத்தின் நிழலும் படர்ந்து இருந்தது. கிரீஷின் பின்னால் வேகமாக வந்த 3 பேர் கும்பல் மோட்டார்சைக்கிளின் உதிரி பாகத்தை (Shock Absorber) வைத்து அவரது தலையில் ஓங்கி அடித்தது. இதில் நிலைக்குலைந்துபோன கிரீஷ் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனையில் சுபா அனுமதித்தார். அங்கு அவர் மறுநாள் காலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து விவேக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சுபாவின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். செல்போனில் அவர் யாருடன் எல்லாம் பேசினார்? என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இப்படியான விசாரணை எல்லாம் அப்போது புதிதாகும். இந்த விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.

கிரீசை, சுபா தான் திட்டமிட்டு கொன்றது அம்பலமானது. சுபா தனது கல்லூரியில் படிக்கும் ஜூனியரான 19 வயது அருண் என்பவரை காதலித்ததும், அவரை திருமணம் செய்வதற்காகவே நிச்சயிக்கப்பட்ட கிரீசை தீர்த்துகட்டியதும் தெரியவந்தது. இந்த கொலைக்கு சுபா, அருண் மற்றும் அவரது 2 நண்பர்களான வெங்கடேஷ், தினேஷ் சேர்ந்து திட்டமிட்டு அரங்கேற்றியது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு பெங்களூர் மட்டுமின்றி மொத்த கர்நாடகாவையும் 2003ம் ஆண்டில் உலுக்கிப்போட்டது.

இந்த வழக்கில் சுபா, காதலன் அருண் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேஷ், தினேஷ் என 4 பேருக்கும் பெங்களூர் நீதிமன்றம் கடந்த 2010 ஜூலை மாதம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அங்கும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. பிறகு பிறகு 2012ம் ஆண்டில் அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி உச்சநீதிமன்றமும் ஆயுள் தண்டனை உறுதி செய்தது.

இதையடுத்து தங்களின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று சுபா, காதலன் அருண் ஆகியோர் கர்நாடகா ஆளுநரிடம் தங்களின் தண்டனையை குறைக்க கருணை மனு செய்தனர். இந்த மனு கர்நாடகா அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்றைய தினம் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுபா - அருண் கருணை மனு பற்றி விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில் இருவருக்கும் கருணை காட்டக்கூடாது. தண்டனையை குறைக்க கூடாது என்று முடிவெடுக்கப்பட்டதோடு, அவர்களின் கருணை மனு தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. கர்நாடகா அமைச்சரவையின் இந்த முடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆளுநர் இறுதி முடிவெடுக்க உள்ளார்.

இந்திய அரசியலமைப்பு பிரிவு 161ன் படி மாநில அதிகார வரம்பிற்குட்பட்ட குற்ற வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும், தண்டனையை குறைக்கவும் ஆளுநரிடம் மனு செய்தார். அந்த மனுவை ஆய்வு செய்து ஆளுநர் அதில் இறுதி முடிவெடுக்கலாம். தற்போது சுபா - அருணின் கருணை மனுவை கர்நாடகா அமைச்சவை நிராகரித்துள்ள நிலையில் ஆளுநர் என்ன முடிவெடுக்க உள்ளார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+