கிருஷ்ணா நதி படுகையில் கச்சா எண்ணெய்.. விரைவில் 45 ஆயிரம் பேரல்கள் உற்பத்தி.. மத்திய அமைச்சர்
பெங்களூர்: கிருஷ்ணா, கோதாவரி ஆற்று படுகையில் இருந்து முதல் முறையாக நேற்று கச்சா எண்ணெய் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் விரைவில் தினமும் 45 ஆயிரம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தியா தனது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய பெரிதும் இறக்குமதியைத்தான் நம்பியிருக்கிறது. அதாவது, இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் 85% இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது. இறக்குமதி அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்க, உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஒஎன்.ஜி.சி இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்களும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு இங்கு தயாரிக்கப்படும் எண்ணெய் உற்பத்தியின் அளவு மிக மிக குறைவே ஆகும்.
இதனால், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய எண்ணெய் வயல்கள் குறித்த ஆய்வுகளை இந்திய பெட்ரோலியத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் ஆந்திர மாநிலம் காக்கிநாடா கடலோர பகுதிகளில் கிருஷ்ணா- கோதாவரி நதியை ஒட்டிய 30 கி.லோ மீட்டர் ஆற்றுப்படுகைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடங்கியிருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடகாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹர்தீப் சிங் பூரி கூறியதவாது:- காக்கிநாடா கடற்கரையை ஒட்டியுள்ள கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் இருந்து முதல் முறையாக நேற்று கச்சா எண்ணெய் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2016-17 ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது.
ஆனால், அங்குள்ள 24 எண்ணெய் கிணறுகளில் 4 செயல்பட்டு வருகிறது. நம்மிடம் எரிவாயு மட்டும் அல்ல.. விரைவில் அதாவது மே, ஜூன் மாதத்திற்குள் தினமும் 45 ஆயிரம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது. இது நமது மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 7 சதவிகிதம் ஆகும். மேலும் நமது கேஸ் உற்பத்தியில் 7 சதவிகிதம் ஆகும். என்று கூறியுள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications