மோர்பி விபத்து: கர்நாடகா தொங்கு பாலத்தில் கார் ஓட்டிய இளைஞர்.. வெளியேற முடியாமல் தவிப்பு.. ஷாக்
பெங்களூர்: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் பலியாகி உள்ள துயர சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் தான் ஆபத்தை உணராமல் கர்நாடகாவில் உள்ள தொங்கு பாலத்தில் ஒருவர் காரை ஓட்டி சென்று சிக்கி கொண்டு தவித்த சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்காக பழமை வாய்ந்த புகழ்பெற்ற கேபிள் பாலம் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பாலம் கட்டப்பட்டு 142 ஆண்டுகள் ஆகிறது.
குஜராத்தில் உள்ள பிரபலமான பாலங்களில் இதுவும் ஒன்றாகும். இதனால் அங்கு செல்லும் மக்கள் அனைவரும் கேபிள் பாலத்துக்கு சென்று செல்போனில் போட்டோ எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

குஜராத்தில் அறுந்த கேபிள் பாலம்
இந்நிலையில் தான் சமீபத்தில் இந்த பாலம் சேதமடைந்தது. இதையடுத்து பாலம் புனரமைப்பு பணி நடைபெற்றது. இதற்காக கடந்த 7 மாதங்கமாக கேபிள் பாலத்தில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேபிள் பாலத்தில் சுமார் 500 பேருக்கும் அதிகமானவர்கள் சென்றனர். சிலர் பாலத்தில் நின்றபடி ஆற்றிலும் ஓடும் தண்ணீரை ரசித்து கொண்டிருந்தனர்.

135 பேர் பலி
அப்போது திடீரென்று கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. பாலத்தின் ஒரு பகுதி தண்ணீருக்குள் மூழ்கியது. இதனால் ஆற்று தண்ணீரில் பலர் மூழ்கினர். இதில் பலர் நீச்சலடித்து வெளியே வந்தனர். ஏராளமானவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிலர் அறுந்து தொங்கிய பாலத்தின்பகுதியில் தொங்கிய போராடினார்கள். அக்கம்பக்கத்தினர், பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார், மாநில, தேசிய பேரிடம் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 135 பேர் பலியாகி விட்டனர். இது பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் அதிர்ச்சி வீடியோ
இந்த சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள தொங்கு பாலம், கேபிள் பாலத்தின் உறுதி தன்மை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உறுதி தன்மையில் குறைபாடு இருந்தால் மக்கள் மற்றும் போக்குவரத்தை தடை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் தான் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொங்கு பாலத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

கர்நாடகா தொங்கு பாலம்
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்புரா அருகே பிரசித்திப்பெற்ற சதோடு நீர்வீழ்ச்சி உள்ளது. இதன் அருகே எல்லாப்புராவில் இருந்து உலுவி மற்றும் தாண்டேலியை இணைக்கும் வகையில் ஆற்றுக்கு குறுக்காக தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த பாலத்தில் மக்கள் நடந்து செல்வதோடு, டூவீலர்களிலும் சென்று வருகின்றனர்.

தொங்கு பாலத்தில் சிக்கிய கார்
இந்நிலையில் தான் தற்போது ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் தொங்கு பாலத்தில் கார் ஓட்டி வருகிறார். துவக்கத்தில் கேபிள் பாலத்தில் சிறிது தூரம் கார் வந்துவிட்டது. அதன்பிறகு தொங்கு பாலத்தின் அளவு சிறிது என்பதால் காரை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. மேலும் கார் பாலத்தின் இருபுறமும் உள்ள சிக்கி கொண்டது. இதனால் பாலத்தை மற்றவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

வெளியான வீடியோ
உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் உதவி செய்ய கார் பாலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதுபற்றி அந்த நபர் கூறுகையில், ‛‛தொங்கு பாலத்தில் டூவீலர்கள் சென்றன. இதனால் காரும் செல்லலாம் என நினைத்துவிட்டேன். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை'' என்றார். இதற்கிடையே தொங்கு பாலத்தில் கார் சென்ற வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் அந்த நபரை திட்டி வருகின்றனர்.

எப்போது நடந்தது?
இருப்பினும் இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. ஆயினும் குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்து நிகழ்ந்த நிலையில் இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications