பஸ்சில் மிஸ்ஸான பேக்.. யுபிஐ பரிவர்த்தனையை வைத்து கண்டுபிடித்து தந்த விமான நிலைய ஊழியர்.. எப்படி?
பெங்களூர்: பெங்களூரில் விமான நிலையத்துக்கு சென்ற சண்டிகரை சேர்ந்த இளைஞர், தனது பேக்-கை பஸ்சில் மிஸ் செய்தார். அதுபற்றி அவர் விமான நிலைய ஊழியரிடம் கூறியபோது பஸ்சில் யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்ததை வைத்து அந்த பஸ்சின் இருப்பிடத்தை அறிந்து பேக்-கை கண்டுபிடித்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி இங்கு பார்க்கலாம்.
சண்டிகரை சேர்ந்தவர் ஜஸ்கரன் சிங். இவர் பெங்களூர் விமான நிலையத்துக்கு பஸ்சில் பயணம் செய்தார். அவர் தனது கையில் பேக் வைத்திருந்தார். பஸ் விமான நிலையத்தை அடைந்தது. இதையடுத்து ஜஸ்கரன் சிங், விமான நிலையத்தில் இறங்கினார். அவர் தனது பேக்-கை பஸ்சிலேயே மிஸ் செய்தார்.

பேக்-கை மிஸ் செய்ததை அவர் உடனடியாக உணரவில்லை. விமான நிலையத்தில் செக்-இன் செய்தபோது தான் பேக்-கை தொலைத்ததை அவர் உணர்ந்தார். உடனடியாக அவர் விமான நிலைய ஊழியர் ரவியிடம் தெரிவித்தார். அவர் உதவி செய்வதாக தெரிவித்தார்.
ஜஸ்கரன் சிங் விமான நிலையத்துக்கு பயணம் செய்த பஸ்சில் டிக்கெட்டை யுபிஐ பயன்படுத்தி பெற்றிருந்தார். இதையடுத்து அந்த யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்ததை வைத்து பஸ்சை கண்டறிந்து பேக்-கை பெற்று கொடுத்தார். இதனால் ஜஸ்கரன் சிங் எந்த தாமதமும் இன்றி விமான பயணத்தை தொடங்கினார்.
இதுபற்றி ஜஸ்கரன் சிங், ‛‛பெங்களூர் விமான நிலைய பயணத்தின்போது எனது பேக்-கை நான் பஸ்சில் மறந்துவிட்டேன். பேக்-கை மறந்ததை செக்-இன் செய்வதற்கு முன்பு தான் அறிந்தேன். பஸ்சில் யுபிஐ பயன்படுத்தியதால் அதனை வைத்து விமான நிலைய ஊழியர் அந்த பஸ் எண்ணை கண்டுபிடித்து எனது பேக்கை மீண்டும் பெற்று தந்தார். இந்த தொழில்நுட்ப நகரம் அனைத்து பிரச்சனைகளையும் தொழில்நுட்பம் வாயிலாக தீர்ப்பது பிடித்திருக்கிறது. ரவிக்கு(ஊழியர்) மிகப்பெரிய நன்றிகள்'' என்று கூறியுள்ளார்.
-
யாருக்கு பிறந்த குழந்தை.. சந்தேக கணவனால் பறிபோன போலீஸ் ஹோம் கார்டு உயிர் -
பரந்தூர் ஏர்போர்ட் கைவிடப்பட்டால்.. தமிழ்நாடு 25 வருடம் பின்னோக்கி செல்லும்! வல்லுநர்கள் எச்சரிக்கை -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications