‛இதுதான் குட்டி பாகிஸ்தான்’... ரம்ஜான் நாளில் கோஷமிட்ட இருவர் கைது... கர்நாடக போலீசார் அதிரடி
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ரம்ஜான் தினத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக கூடியிருந்த வேளையில் ‛இது மினி பாகிஸ்தான்' என கோஷமிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.
இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் பெரும்பான்மையான அரசியல் கட்சி தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர்.

கர்நாடகத்திலும் கொண்டாட்டம்
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவிலும் மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள காவலண்டே கிராமத்திலும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் கொண்டாடினர். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியானது.

மினி பாகிஸ்தான் கோஷம்
அதில் ரம்ஜான் தொழுகை முடித்து வெளியே வந்தவர்கள் சாலையில் நின்று ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து கொள்ளும் காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும் ‛காவலண்டே சோட்டோ பாகிஸ்தான்' (காவலண்டே மினி பாகிஸ்தான்) எனக்கூறும் சத்தமும் கேட்டது. முஸ்லிம் மக்கள் அதிகம் திரண்டிருந்த நிலையில் காவலண்டே கிராமத்தை இப்படி கூறியிருந்தனர்.

விசாரிக்க உத்தரவு
இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவ துவங்கியது. இதையடுத்து சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும். கவலந்து குட்டி பாகிஸ்தான் எனக்கூறிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இத்தகைய நபர்களை கைது செய்யாவிட்டால் பிரிவினைவாதம் அதிகரிக்கும் என இந்துத்துவ அமைப்பினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் இதுபற்றி நேற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‛விசாரணை நடத்தும்படி எஸ்பிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

2 பேர் கைது
இந்நிலையில் கோஷமிட்ட இருவரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்களின் பெயர் பயாஸ் ஷெரிப், ஹனன் அலி என்பது தெரியவந்தது. இவர்கள் படிப்பை பாதியில் கைவிட்ட நிலையில் கூலி வேலைக்கு சென்று வருவதும் தெரியவந்தது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications