பணத்தை தராத கர்நாடக அரசு.. தூக்குபோட்டு கான்ட்ராக்டர் தற்கொலை.. அரசியலில் சூறாவளி
பெங்களூர்: சில மாதங்களுக்கு முன்னர் அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு ஒப்பந்ததாரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஊழல் பெருகி வருவதாக ஒப்பந்ததாரர்கள் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கியுள்ளனர். அதாவது, அரசு ஒரு திட்டத்திற்காக நிதி ஒதுக்கி அத்திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்ததாரர்களை நாடுகிறது. இந்த ஒப்பந்ததாரர்கள் ஒதுக்கப்பட்ட பணத்தை கொண்டு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார்கள். ஆனால் சமீப நாட்களாக அரசு அதிகாரிகள் இந்த ஒப்பந்ததாரர்களுக்கான பணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
ஒருவேளை ஒதுக்கப்பட்ட நிதியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த வேண்டும் எனில் அரசு அதிகாரிகள் சுமார் 40 சதவிகிதம் வரை கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு முன்னரும் இதுபோன்று கமிஷன் கொடுக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் அது 10-20 சதவிகிதம் வரைதான் இருந்ததாகவும் ஆனால் தற்போது இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர்.

கடன்
தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாத் என்ற காண்ட்ராக்டர் கர்நாடக அரசின் பல திட்டங்களை ஒப்பந்தமாக எடுத்து முடித்து கொடுத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் அவர் இருந்திருக்கிறார். இது குறித்து நண்பர்கள் விசாரித்ததற்கு, தனக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அப்போதும் இவருக்கான நிலுவை தொகை கிடைக்கவில்லை. இதனையடுத்து கடன் கொடுத்த நபர்கள் ஏற்படுத்திய நெருக்கடி காரணமாக தனது புது வீட்டை விற்றுள்ளார்.

தற்கொலை
இவ்வாறு கடும் நெருக்கடியில் இவர் சிக்கியிருப்பதை உணர்ந்த இவரது நண்பர்கள் இவருக்கு உதவி செய்வதாக கூறியுள்ளனர். இதற்கிடையில் தேவராயனதுர்கா விருந்தினர் மாளிகையில் நேற்று பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினர் தற்கொலை குறிப்பு ஒன்றையும் கண்டெடுத்திருக்கின்றனர். அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று பிரசாத் கைப்பட எழுதியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து விசாரிக்கையில், வெளியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பிரசாத்தின் நண்பர்கள் கூறுகையில், "அரசு தரப்பிலிருந்து வந்து சேர வேண்டிய பணம் கிடைக்காததால்தான் இவர் தற்கொலை செய்துகொண்டார்" என்று குற்றம்சாட்டியுள்ளனர். இன்னும் சில மாதங்களில் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் ஆளும் பாஜகவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் இதேபோல நிலுவை தொகை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்னர் தன்னுடைய மரணத்திற்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அரசு ஒப்பந்ததாரரான இவர் சாலை ஒன்றை அமைத்து கொடுத்திருக்கிறார். இதற்கு ரூ.4 கோடி வரை அரசு கொடுக்க வேண்டும். ஆனால் இந்த தொகை கொடுக்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது. இந்த இழுவை குறித்து ஒப்பந்ததாரர் சந்தோஷ் பிரதமர் வரையிலும் புகார் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கமிஷன்
ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்போது பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா தரப்பினர் இவரை அழைத்து பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் அமைச்சருக்கு 40% கமிஷன் கொடுத்தால் முழு தொகையும் உடனடியாக விடுவிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வேறு வழியின்றி சந்தோஷ் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் கர்நாடகாவில் பூதாகரமாக வெடித்தது. ஆனால் இந்த தற்கொலைக்கு சந்தோஷ் வாங்கிய கடன்களே காரணம் என்று காவல்துறையினர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இருப்பினும் அமைச்சர் பொறுப்பிலிருந்து ஈஸ்வரப்பா ராஜினாமா செய்துள்ளார். இது நடந்து பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது மற்றொரு ஒப்பந்ததாரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
-
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
தினமும் ரூ.100 கோடியை செலவு செய்யும் பெங்களூர் மாநகராட்சி! ஆனா பாருங்க.. ஒன்னும் மாறல! -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார்












Click it and Unblock the Notifications